dinamalar telegram
Advertisement

வாரிய தலைவர் நியமனத்தை ஒத்திவைத்த முதல்வர்!

Share

''ஓவர் புத்திசாலித்தனம் உடம்புக்கு ஆகாது ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, 'டுவிட்டர்'ல அப்பப்ப பதிவுகள் போடுவார்... சமீபத்துல அவர் போட்ட பதிவுல, 'நீட் தேர்வின் தாக்கம் குறித்த நீதியரசர் ஏ.கே.ராஜனின் அறிக்கை, தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது... போதுமா...?

''வெயிட்... சமஸ்கிருதம் எங்கப்பான்னு நானும் கேட்டேன்... அது செத்து ரொம்ப நாளாச்சுன்னு சொல்றாங்கப்பா'ன்னு குசும்பா போட்டிருந்தார் ஓய்...

''அதுலயும், நீதியரசர் என்பதற்கு பதிலா, நிதியரசர்னு தப்பா குறிப்பிட்டிருந்தார்... இதை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு சரியான பதிலடி தந்துட்டா ஓய்...

''அதுல, 'முதல்ல தமிழை தப்பில்லாம எழுதுங்க... அப்பறமா மற்ற மொழி குறித்து கருத்து சொல்லுங்க... உங்க பெயரும், உங்கள் தலைவர் பெயரும் சமஸ்கிருதம் தான்'னு சரமாரியா பதிவுகளை போட்டு தள்ளிட்டா... இதைப் பார்த்த ராஜா, சத்தமே இல்லாம பதுங்கிட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு முக்கியத்துவம் தந்தது பற்றி விசாரணை நடக்கு வே...'' என, அடுத்த தகவலுக்கு தடம் மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், ஆத்துார் அரசு மருத்துவமனையில சமீபத்துல ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலா பிரதமர் மோடி திறந்து வச்சாரு... ஆத்துார்ல நடந்த விழாவுல, ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி பாலாஜியை பேசும்படி, தலைமை மருத்துவ அலுவலர் கண்ணன் கேட்டுக்கிட்டாரு வே...

''பாலாஜியும், கொரோனா காலத்துல, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., செய்த நலப்பணிகளை பட்டியல் போட்டு பேசினாரு... அரசு விழாவுல, ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு முக்கியத்துவம் கொடுத்ததா சொல்லி, ரெட் கிராஸ், ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் பாதியிலயே எழுந்து போயிட்டாவ வே...

''தி.மு.க., நிர்வாகிகளும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் புகார் தந்திருக்காவ... இது சம்பந்தமா, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் தரப்புல இருந்து விசாரணை நடந்துட்டு இருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.

''போட்டி கடுமையானதால, யாருக்குமே இல்லைன்னு முடிவு பண்ணிட்டாரு பா...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் அன்வர்பாய்.

''எந்தப் பதவிக்கு யாருவே போட்டி போட்டது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''நீலகிரி மாவட்டம், குன்னுார்ல, அரசு தேயிலை தோட்ட நிறுவனமான, 'டான்டீ' இயங்கிட்டு இருக்குது... இந்த வாரியத்துக்கு தலைவரை நியமிக்க ஏற்பாடுகள் நடந்துச்சு பா...

''இந்தப் பதவியை பிடிக்கிறதுல, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலர் முபாரக் கோஷ்டி இடையே கடும் போட்டி ஏற்பட்டது... இதுக்கு மத்தியில, இந்தப் பதவியை பிடிக்க, கூடலுார் முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணியும் தனியா முயற்சிகள் செய்தாரு பா...

''இவங்களுக்குள்ள ஏற்பட்ட கடும் போட்டியால, 'இப்போதைக்கு வாரிய தலைவரை நியமிக்க வேண்டாம்... அப்புறம் பார்த்துக்கலாம்'னு முதல்வர் ஸ்டாலின் சொல்லிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஸ்டாலின் சம்ஸ்க்ருதம் இல்லையே சுத்தமான ஆங்கிலம் இவர்கள்தான் தமிழை தூக்கிப் பிடிக்கிறார்களாம் ?

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    பதவியை ஏலத்தில் விட்டுவிடலாம் அல்லவா? அல்லது அந்த மூன்று பேரையும் கூப்பிவிட்டு, உங்களுக்குள் பேசி யாரு என்று முடிவு பண்ணிக்கிட்டு வாருங்க என்று சொன்னால், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பெட்டியை மாற்றிக்கொண்டு, ஒரு முடிவுக்கு வருவார்கள் அல்லவா? இதை செய்யாமல் விட்டுவிடுவது எப்படி?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement