dinamalar telegram
Advertisement

கட்டை விரலில் மோதிரம் அணியலாமா?

Share

Question:நான் என் கட்டை விரலில் மோதிரம் அணிந்து இருந்தேன். என் உதவியாளர் ஒருவர், 'கட்டை விரலில் அணியக் கூடாது அது தவறான சக்திகளை நம்மை நோக்கி ஈர்க்கும்' என்று சொன்னார். இதைப் பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல முடியுமா?
சத்குரு:

பெரும்பாலான சமயங்களில் நான் தவிர்க்க நினைக்கும் ஒரு தலைப்பில் என்னைப் பேசச் சொல்கிறீர்கள். உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி நான் பொதுவாக பேச விரும்புவதில்லை. அப்படி நான் பேசினாலும் உங்களிடம் இருக்கும் சாய்ஸ் தான் என்ன? ஒன்று நீங்கள் என்னை நம்பலாம் அல்லது நம்பாமல் போகலாம். அந்த நம்பிக்கை உங்களை உண்மைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்லுமா என்ன? தன் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி பேசுவதில் மக்கள் சுகம் மட்டுமே காண்கிறார்கள்.

இதன் விளைவுகள்...
சரி, இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த மனித உடலமைப்பு ஒரு குறிப்பிட்ட இயங்கும் செயல்தன்மை கொண்டது. நீங்கள் அதனுடன் மிகுதியாக அடையாளப்பட்டு போனதால் உங்களால் இவ்வுடலை இந்த கண்ணோட்டத்தில் பார்க்க இயலாமல் போகலாம். ஆனால், நீங்கள் அறுவை சிகிச்சைக்கு போனால் உங்கள் உடலை ஒரு எந்திரத்தைப் போலவே அணுகுவார்கள். உங்களை அங்கே கிடத்தி, துணிகளை நீக்கி, சுத்தப்படுத்தி, செய்வதைச் செய்துவிட்டு அனுப்பிவிடுவார்கள். உங்களை ஒரு மெஷினைப் போலவே அணுகுவார்கள்.
இந்த உடல் ஒரு அமைப்புமுறை (mechanism) என்பதால் இது பலவித சாத்தியங்களுடன் இங்கு வந்துள்ளது. யோகாவிலும் இந்த உடலை தெய்வீகத்திற்கான ஏணிப்படியாகத்தான் பார்க்கிறோம். தற்சமயம், இதனை நீங்கள் மிக மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்துகிறீர்கள். ஆகாய விமானத்தை, கார் போல் பயன்படுத்துகிறீர்கள். சிறகொடிக்கப்பட்ட விமானத்தை பஸ் என்று சொல்லி ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இது விமானம் என்று தெரிந்த மனிதரால் அழாமல் இருக்க முடியுமா? நானும் அதுபோன்ற ஒரு நிலையிலேயே இருக்கிறேன். நீங்கள் செய்யும் யோகா, நீங்கள் வாழும் விதத்தை பார்த்தால் அழுகைதான் வருகிறது. “இந்த வாழ்க்கையை எப்படியெல்லாம் அற்புதமாய் வாழலாம், இப்படி இருக்கிறார்களே” என்றே எண்ணத் தோன்றுகிறது.

நான் இந்த மோதிர கதைக்குள் சென்றால் இது அம்புலிமாமா கதை போல் தோன்றும். வேறு யாரோ எனக்கு இதுபோன்ற கதையைச் சொன்னால் நான் நம்ப மாட்டேன். இதுபோல் பல பரிமாணங்களைச் சேர்ந்த பல உண்மைகள் உள்ளன. நாம் இங்கு அமர்ந்திருக்கும் போதே இங்கு பல பரிமாணங்களைச் சேர்ந்த பல உண்மைகள் நடந்தேறிய வண்ணம் உள்ளன. இது பல தளங்களைக் கொண்ட ஒரு உலகம். ஒன்றுக்குள் ஒன்று பிணைந்திருக்கிறது. ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருக்கிறது. இன்று நவீன அறிவியலும் இதனை உணரத் துவங்கிவிட்டது.

தந்திரம் என்பதும் ஒருவித தொழில்நுட்பம். சில வருடங்களுக்கு முன் எதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்று நாம் நினைத்தோமோ அவை யாவும் இன்று உண்மையாகி விடவில்லையா? அதுபோலவே, தந்திரமும் வேறொரு பரிமாணத்தைச் சேர்ந்ததொரு தொழில்நுட்பம். ஆனால், இது பொருள்நிலையிலான பரிமாணத்தைச் சேர்ந்தது. நீங்கள் அறிந்திருக்கும் நிலையிலான பொருள்நிலை சார்ந்த பரிமாணம் அல்ல, இருந்தும் இது பொருள் நிலையிலான பரிமாணம்தான்.

கட்டை விரலில் மோதிரம் அணிந்தால்...
சரி, கட்டைவிரலில் மோதிரம் அணிவதால் எனக்கு என்னாகும் என்றீர்களே... அதனை அணிவதால், உங்களால் கையாள இயலாத, குறிப்பிட்ட விதமான சக்திகளை உங்களை நோக்கி நீங்கள் ஈர்க்கும்படி நேரும். உங்களை அது உலுக்கிப் போடலாம். நீங்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது, கட்டை விரலில் மோதிரம் அணிந்திருந்தால் அது குறிப்பிட்ட விதமான சில சக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும் அதனால் உங்கள் வாழ்க்கையே உலுக்கப்படலாம். குறிப்பாக, நீங்கள் கட்டைவிரலில் மோதிரம் அணிந்திருந்தால், நீங்கள் சிலருக்கு அழைப்பு விடுக்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அதனாலேயே மோதிர விரலில் மட்டுமே மோதிரம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் மோதிர விரலில்தான் அணிய வேண்டும் என்று நிர்ணயித்துள்ளார்களே அது தற்செயலாக நடந்தது என்று நினைக்கிறீர்களா? இல்லை, இது தற்செயலாக நடந்தேறிய நிகழ்ச்சி அல்ல.
மோதிர விரலின் அடி முதல் நுனி வரை பிரபஞ்சமே இருக்கிறது. உங்கள் கம்ப்யூட்டருக்கான மௌஸை போன்றது இவ்விரல். சில குறிப்பிட்ட விஷயங்களை இந்த விரலில் செய்வதனால், ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல முடியும். இந்த உடலைக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். உங்கள் உடலில் மட்டுமல்ல, இங்குள்ள அத்தனை உடல்களின் மீதும் ஆளுமை செலுத்தலாம். உங்கள் மோதிர விரல் மூலம் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும். மோதிர விரலைப் பற்றி யோகத்தில் முழுமையான அறிவியலே இருக்கிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதற்கு மோதிர விரல் ஒரு சாவி போல் செயல்படுகிறது. இதனால் மோதிர விரலை செப்பனிடுவது மிக மிக அவசியமாகிறது. இதன்மூலம் உடலிற்கு ஒருவித ஸ்திரத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், இன்று மோதிரம் ஒரு இடத்தில் அணியப்படுவதில்லை. எங்கெல்லாம் ஓட்டையிட முடியுமா அங்கெல்லாம் ஓட்டையிட்டு வளையம் மாட்டிக் கொள்கிறார்கள். இதுபோன்ற செய்கைக்கு ஒருவிதமான தாக்கம் இருக்கத்தான் செய்யும். இவற்றை செய்து கொண்டு ஒரு மனிதர் ஓரளவிற்கு சுகமாய் வாழ முடியும், உங்கள் வண்டியை உங்களால் இயக்க முடியும் ஆனால் இப்படி இயக்குவதனால், அதற்கு இரண்டு மடங்கு எரிபொருள் தேவைப்படும்.

வாழ்வின் செயல்முறையில் உங்களை நீங்களே முழுமையாக ஆற்றல் இழக்கச் செய்து கொள்வீர்கள். சந்தோஷமாக, பிரயத்தனப்படாமல் செய்ய வேண்டியவற்றை தவறான விஷயங்களைச் செய்து வலுவிழப்பீர்கள். எல்லோருமே வாழ்கிறார்கள், ஆனால் எல்லோருமே சுகமாக காரியங்களைச் செய்வதில்லையே? ஏனெனில், உலகில் சரியான விஷயங்கள் உங்களுக்கு நிகழவில்லை.

நீங்கள் சரியானவற்றை செய்யாத வரையிலும் உங்களுக்கும் சரியானவைகள் நிகழாது. உங்கள் மூளையில் நீங்கள் ஆன்டெனாவைப் பொருத்திக் கொண்டால், கேட்கும் ஒவ்வொரு ரேடியோ அலைவரிசைகளையும் கேட்டுத்தானே ஆகவேண்டும். இவை அனைத்தையும் பொருத்துப் போக வேண்டிய சூழ்நிலை நேரும் அல்லவா? உங்களுக்கு இதையெல்லாம் கேட்பதற்கு விருப்பமில்லாவிட்டால், ஆன்டெனாவை கழட்டுவது தானே நல்லது? கட்டைவிரல் மோதிரமும் அப்படித்தான். உலோகத்திற்கு ஒருவித உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உள்ளது. அதற்கென்று சில குணங்கள் உள்ளன. அவற்றால் நம் மீது தாக்கம் ஏற்படுத்த முடியும். அதனாலேயே அவற்றை ஒரு குறிப்பிட்ட விதத்தில் நாம் பயன்படுத்துகிறோம். கட்டை விரலில் மோதிரம் அணிவது தீய சக்திகளை நம் பால் ஈர்க்கும். அதனை கையாளும் திறன் நமக்கு இல்லாமல் இருக்கும் ஆதலால், கட்டை விரலில் மோதிரம் அணியக் கூடாது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement