dinamalar telegram
Advertisement

கல்யாண மண்டபம் கட்ட காசு திரட்டும் போலீஸ் அதிகாரி!

Share

கல்யாண மண்டபம் கட்ட காசு திரட்டும் போலீஸ் அதிகாரி!''மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கற மாதிரி முழிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாருவே அது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''அடுத்து நடக்கப்போற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல, சென்னை மாநகராட்சியில இருக்கற 200 'சீட்'ல, 180 கவுன்சிலர் சீட்களை பிடிச்சாகணும்னு, ஆளுங்கட்சியினர் 'பிளான்' பண்ணியிருக்கா ஓய்...

''இதுக்காக, அ.தி.மு.க., ஆட்சியில, மாநகராட்சி சாதனை அடையாள சின்னங்களை வார்டு வாரியா மறைக்கற வேலையில, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இறங்கியிருக்கா...

''சமீபத்துல, சென்னை தி.நகர்ல அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதியில கட்டியிருந்த பஸ் நிறுத்தங்கள்ல இருந்த போர்டுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியிருக்கா... தகவல் கேட்டு ஓடோடி வந்த ஆயிரம் விளக்கு பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள், 'போராட்டம் நடத்துவோம்'னு எச்சரிச்சிருக்கா ஓய்...

''மாநகராட்சி அதிகாரிகளோ, 'எங்களுக்கு வேற வேலையில்லாமலா இதை எல்லாம் செய்துண்டு இருக்கோம்... ஆளுங்கட்சி உத்தரவுங்கறதால செய்யறோம்'னு சொல்லியிருக்கா... ஆனாலும், அ.தி.மு.க.,வினர் விடாப்பிடியா எதிர்க்க, 'போர்டு'களை எடுக்காம ஊழியர்கள் திரும்பி போயிட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''உதிரிபாகங்களே வாங்க மாட்டேங்கிறாங்க...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு டிப்போவுல இருந்து 38 டவுன் பஸ்கள் இயக்குறாங்க... இதுல, ஒரு பஸ்சுக்கு கூட, 'ஸ்டெப்னி டயர்' கிடையாதுங்க... வழியில முன்புற டயர் 'பங்சர்' ஆகிடுச்சுன்னா, பின்புற டயர்ல ஒண்ணை கழற்றி மாட்டி, டிப்போவுக்கு ஓட்டிட்டு வரும்படி அதிகாரிகள் சொல்றாங்க...

''அதே மாதிரி, 'ஹெட்லைட்' உள்ளிட்ட சின்ன பாகங்கள் பழுதானாலும், தங்களது பாதுகாப்புக்காக டிரைவர்களே சொந்தக் காசை போட்டு, மாத்திக்க வேண்டியதா இருக்குதுங்க... டிப்போ நிர்வாகம் எதையும் கண்டுக்காம இருக்கிறதால, டிரைவர்கள், கண்டக்டர்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.

''கல்யாண மண்டபம் கட்டுறதால, ஓடி ஓடி பணம் சேர்க்கிறாரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''ஓடியாடி உழைக்கிறது உடம்புக்கு நல்லது தானே வே...'' என்றார் அண்ணாச்சி.


''முழுசா கேட்டுட்டு பேசுங்க... திருவள்ளூர் மாவட்டத்துல இன்ஸ்பெக்டரா இருக்கிற ஒருத்தர், கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா, சரக்கு விற்பனை, செம்மர கடத்தல் மாமூல்னு, மாசத்துக்கு, 10 லட்சம் ரூபாய் வரைக்கும் கல்லா கட்டுறாரு பா...

''இப்ப, சொந்தமா கல்யாண மண்டபம் கட்டிட்டு இருக்காரு... அதுக்கு ஏகப்பட்ட பணம் தேவைப்படுறதால, கொசஸ்தலை ஆற்றுல மாட்டு வண்டிகள்ல மணல் கடத்த, மாசம் 1 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விட்ட மாதிரி, 'மாமூல் பிக்ஸ்' பண்ணி குடுத்துட்டாரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''வாங்க பாபு... எப்ப டில்லியில இருந்து வந்தீங்க...'' என, நண்பரிடம் அந்தோணிசாமி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement