dinamalar telegram
Advertisement

சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு

Share

தான் படமாக எடுக்கும் தெரு ஒர கலைஞர்கள் மற்றும் மக்களின் புகைப்படங்களை அவர்களே எதிர்பாராதவண்ணம் அழகாக பிரிண்ட் போட்டு மீண்டும் தேடித்தேடிப் போய் கொடுப்பவர்தான் பாலசுப்பிரமணியன்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் நவராத்திரி விசேடத்தை முன்னிட்டு கொலு பொம்மை விற்பவர்கள், பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள் என்று எளிய மனிதர்களால் சுறுசுறுப்பு பெற்றிருக்கிறது.இவர்களை அன்றாடம் பல புகைப்படக்கலைஞர்கள் தங்கள் சந்தோஷத்திற்காக படம் எடுக்கின்றனர் ஆனால் அந்த எளிய கலைஞர்களுக்கு இதனால் என்ன சந்தோஷம் வந்துவிடப் போகிறது என்று எண்ணிய ‛போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ்' அமைப்பின் முன்னாள் தலைவரான பாலசுப்பிரமணியன், தான் யாரை எல்லாம் படம் எடுத்தாரோ? அவர்களது படத்தை கம்ப்யூட்டர் மூலம் சரி செய்து, மேலும் அழகு சேர்த்து பின் தனது சொந்த செலவில் பிரிண்ட் செய்து ஒவ்வொரு படத்தையும் ஒரு உறையில் போட்டு அவர்களை மீண்டும் தேடிப்போய்க் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறார்.
படங்களை பெற்றதும் கொஞ்சமும் இதை எதிர்பார்க்காத அந்த மக்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் கைகூப்பி நன்றி தெரிவிக்கின்றனர் பத்திரமான இடத்தில் பொக்கிஷம் போல வைத்துக் கொள்கின்றனர் ஏதாவது பணம் கொடுக்கணுமாய்யா என்று வெள்ளந்தியாக கேட்கின்றனர் அதெல்லாம் வேண்டாம் இலவசம்தான் என்றதும் நம்ப முடியாமல் பார்த்து கண்களால் மீண்டும் நன்றி தெரிவிக்கின்றனர்.
ஒரு சில நவராத்திரி பொம்மை விற்கும் கடைகளில், விற்பவர் உதவியாளர் என இருவர் இருப்பர் அவர்கள் இருவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இரண்டு பிரிண்டுகள் போட்டுக் கொடுக்கிறார்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடு செய்யாத சந்தோஷத்தை இந்த படம் கொடுக்கும் அவர்களுக்கும் சரி எனக்கும் சரி என்ற பாலசுப்பிரமணியன் இந்த தொண்டு தொடரட்டுமாக
-எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement