dinamalar telegram
Advertisement

பள்ளிக்கல்வி துறையில் 'டிஜிட்டல்' மோசடி!

Share

''இவா எல்லாம் திருந்தவே மாட்டாளா ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''யாரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''திருப்பூர் மாவட்டத்துல ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், வீட்டுமனை பட்டா, அரசு வீடு வாங்கி தரதா சொல்லி, தினமும் 300 - 400 பேர்ட்ட மனுக்களை வாங்கிண்டு போய் தாலுகா அலுவலகம், குடிசை மாற்று வாரிய அலுவலகத்துல கொடுக்கறா ஓய்...
''ஒவ்வொருத்தர்ட்டயும் ஆயிரக்கணக்குல பணம் வசூலிக்கறா... ஆளுங்கட்சியினர் கொடுக்கற மனுக்கள்ல நிறைய பிரச்னையும் இருக்கு ஓய்...
''ஏற்கனவே பட்டா வாங்கி இருக்கறவாளும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் மனு கொடுத்துருக்கா... இதனால உண்மையான பயனாளிகளுக்கு பட்டா, வீடு கிடைக்கறது கஷ்டமாறது ஓய்...''மக்கள்ட்ட கெட்ட பெயர் சம்பாதிச்சு கொடுக்கும்கறதால, இந்த மாதிரி விஷயங்கள்ல முதல்வர் கவனம் செலுத்தணும் ஓய்...'' என முடித்தார், குப்பண்ண

ரெண்டு மடங்கு, 'கட்டிங்' கேட்கிறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''என்ன விஷயமுன்னு சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி

.''தமிழக அரசின் சுகாதாரத் துறையில, 'பிசியோதெரபி, நர்சிங், பார்மசி' போன்ற மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புக்கு அங்கீகாரம் கொடுக்க, தலா ஒரு சீட்டுக்கு இவ்வளவு தொகைன்னு, 'கட்டிங்' நிர்ணயிச்சிருக்காங்க பா...
''அந்த துறை அதிகாரிகள் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில வாங்குனதை விட, இப்போ இரண்டு மடங்கு கட்டிங் கேட்கிறாங்க பா...''இவ்வளவு கொடுத்து அங்கீகாரம் வாங்கினா, மாணவர்களின் தலையில தான் நன்கொடை தொகையை சுமத்த வேண்டி வரும்னு, கல்லுாரி நிர்வாகத்தினர் சொல்றாங்க பா...
''மாணவர்கள் மீது அக்கறைன்னு சொல்லி, 'நீட்' தேர்வுக்கு எதிரா போராடுற தமிழக அரசு, இந்த கட்டிங் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமான்னு, சம்பந்தப்பட்டவங்க கேள்வி கேட்குறாங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்
.''பல கோடி ரூபாய் பாதாளத்துல போயிட்டு இருக்குன்னு பள்ளிக்கல்வி துறையில கவலைப்படுதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி
''என்ன சொல்லுறீங்க...'' என அதிர்ச்சியுடன் கேட்டார், அந்தோணிசாமி
.''தமிழக பள்ளிகள்ல, 'எண்ணும் எழுத்தும், டிஜிட்டல் வழி கற்பித்தல், தரமான அடிப்படை கல்வி வழங்குதல்'னு பல திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், உலக வங்கியும், தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி கொடுக்கு வே..
.''அதை பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நேரடியா பயன்படுத்தாம, தனியார் நிறுவனங்களுக்கும், திட்டத்தை மேற்பார்வையிடும் அலுவலர்களோட ஆடம்பரத்துக்கும் செலவு பண்ணுதாவ வே..
.''கல்வி வளர்ச்சிக்கு, 'ஆப்' தயார் பண்றேன், 'சாப்ட்வேர்' செஞ்சு தர்றேன்னு சொல்லி, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளுக்கு கும்பிடு போடும் தனியார் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகுது வே..
.''டிஜிட்டல் வேலைகளை எல்லாம்,'எல்காட்' வழியா தான் செய்யணும்ங்கிற விதியையும் மீறி, அதிகாரிகள் தனியார் நிறுவனங்களுக்கு வேலை கொடுக்காவ... இதுக்கு பின்னாடி பெரிய, 'விஷயம்' இருக்குன்னு, கடைநிலை ஊழியர்கள் பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
''அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒரே குட்டையில ஊறிய மட்டைகள் தானுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி கிளம்ப, நண்பர்களும் நகர்ந்தனர்.


ஆளுங்கட்சி ஆதரவு அதிகாரியின் உறவு பாசம்!
''ஓப்பன் டெண்டர் விடப்டாதுன்னு கையை கட்டி போட்டிருக்கா ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''நீலகிரி மாவட்டத்துல இருக்கற, 'டாஸ்மாக் பார்'களை ஏலம் விட அதிகாரிகள் தயாராகிண்டு இருக்கா... குன்னுார்ல இருக்கற மாவட்ட டாஸ்மாக் ஆபீஸ்ல இருக்கற அதிகாரிகளிடம், ஆளுங்கட்சியின் நகர, ஒன்றிய செயலர்கள் பலரும் பேசியிருக்கா ஓய்...

''அப்ப, 'பார் ஏலத்துல ஓப்பன் டெண்டர் எல்லாம் விடாதேள்... எங்களுக்கும், நாங்க கை காட்டறவாளுக்கு மட்டும் தான் டெண்டரை தரணும்'னு 'ஆர்டர்' போட்டிருக்கா... ஆளுங்கட்சியினரை பகைச்சுண்டு அதிகாரிகள் வேலை பார்த்துட முடியுமோ... இதனால, பார் டெண்டரை ரகசியமா நடத்த அதிகாரிகள் முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.''பட்டும் திருந்தாதவங்களை என்னன்னு சொல்றதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''திருவள்ளூர் மாவட்டத்துல, 'டாஸ்மாக்' சரக்குகளை வாங்கி, 24 மணி நேரமும் திருட்டுத்தனமா விற்பனை செய்றவங்களை மதுவிலக்கு போலீசார் கஷ்டப்பட்டு பிடிச்சுட்டு வர்றாங்க... அவங்களோ, பெண் அதிகாரியிடம், 'பேசி' முடிச்சு, அவங்க தயவுல வெளியில போயிடுறாங்க...

''அதே மாதிரி, பல டாஸ்மாக் கடைகள்ல அனுமதியற்ற பார்கள் நடக்கிறதையும், பெண் அதிகாரி கண்டுக்க மாட்டேங்கிறாங்க... 'ஏற்கனவே இவங்க, செங்கல்பட்டுல வேலை பார்த்தப்ப, தேக்கு மரக்கடத்தல் பிரச்னையில சிக்கி, படாதபாடு பட்டு மீண்டு வந்தாங்க... இங்கே வந்தும், திருந்தின மாதிரி தெரியலையே'ன்னு சக போலீசார் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''தமிழ்செல்வி நீங்க பேசுறது கேட்கலை... 'வாய்ஸ் பிரேக்' ஆகுது...'' என்றபடியே பெஞ்சில் இருந்த ஒருவர் மொபைல் போனுடன் எழுந்து செல்ல, ''தானாடாவிட்டாலும் தசையாடும்னு சும்மாவா சொன்னாவ...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அண்ணாச்சி.

''புதிர் போடாம விஷயத்துக்கு வாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தமிழக உளவுத்துறையில எஸ்.பி., அந்தஸ்துல இருக்கிற ஒரு அதிகாரி, முன்னாடி, லஞ்ச ஒழிப்புத் துறையில இருந்தாரு... அப்ப, கருணாநிதி ஆட்சியில புதிய தலைமை செயலகம் கட்டிய முறைகேடு புகாரை விசாரிச்சிருக்காரு வே...

''அந்தப் புகார் சம்பந்தமா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்ப பொதுப்பணித் துறை அமைச்சரா இருந்த துரைமுருகன் ஆகியோரை விசாரிக்க, இரண்டரை வருஷமா எந்த நடவடிக்கையும் எடுக்காம, புகாரை கிடப்புல போட்டுட்டாரு...

''ஏன்னா, அதிகாரியின் மாமனாரும், பெரிய குடும்பத்து மருமகனின் அப்பாவும், அண்ணன், தம்பி உறவு முறையாம்... ரெண்டு பேருமே தனியார் வங்கியில, 40 வருஷமா ஒண்ணா வேலை பார்த்திருக்காவ வே...

''இதனாலயே, அந்த வழக்குல அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்காம 'பெண்டிங்'குல போட்டார்னு இப்ப தகவல்கள் கசியுது... இப்பவும், தி.மு.க., ஆட்சி நடக்கிறதால, அதிகாரிக்கு எந்த சிக்கலும் வராதுன்னும் பேசிக்கிடுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''பெருமாளே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement