dinamalar telegram
Advertisement

திருமஞ்சனத்தில் மலையப்ப சுவாமி

Share


சந்தனம்,பன்னீர்,ஜவ்வாது,மஞ்சள் உள்ளீட்ட பல்வேறு வாசனைப் பொருட்களால் திருமலையின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமியை நீராட்டுவதுதான் திருமஞ்சனம்.
ஆண்டு தோறும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த திருமஞ்சனம் நிகழ்வு நடத்தப்பட்டாலும் பிரம்மோற்சவத்தின் போது நடத்தப்படும் திருமஞ்சனம் மிக விசேடம்காரணம் நிகழ்ச்சி நடைபெறும் இரண்டு மணி நேரத்தில் உலர்ந்த பழங்கள்,ஜாதிக்காய்,நீலபட்டு நுால்கள்,ரோஜா இதழ்கள் போன்றவைகளால் செய்யப்பட்ட ஏழு மாலைகள் மலையப்ப சுவாமிக்கு மாற்றி மாற்றி அணிவித்து அழகு சேர்க்கப்படும்.இந்த ஏழு விதமான மாலைகளை தேவஸ்தான ஊழியர்கள் மூன்று நாட்கள் இரவு பகலாக உழைத்து உருவாக்கியுள்ளனர், இதற்கான செலவினை சென்னையைச் சேர்ந்த பெருமாள் பக்தர் ஒருவர் ஏற்றுக்கொண்டார்.திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்ற கோவிலுனுள் உள்ள ரங்கநாயகுலா மண்டபம் பூ மற்றும் இலைகளால் தாமரை போல வடிவமைக்கப்பட்டு இருந்ததுகோவில் அர்ச்சகர்கள் மந்திரங்களின் பின்னனியில் நடந்த இந்த கண் கொள்ளா திருமஞ்சன நிகழ்வை நேரில் பார்க்க பக்தர்களுக்கு அனுமதியில்லை தேவஸ்தான சேனல் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement