dinamalar telegram
Advertisement

திருமலையில் பிரம்மோற்சவ விழா துவங்கியது

Share

திருமலை திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது கொரோனா காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள்ளேயே சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களிலேயே பிரம்மாண்டமான விழா பிரம்மோற்சவ விழாவாகும்.ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலையிலும் இரவிலும் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் விதம் விதமான வாகனத்தில் எழுந்தருளுவர்.
சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளும் சுவாமியைக் காண பல லட்சம் பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருகைதருவர்.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக சுவாமி மாடவீதிகளில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவிலுக்கு உள்ளே உள்ள மண்டபத்தில் மட்டுமே எழுந்தருளுகிறார்.
இந்த நிகழ்வின் போது கோவில் பட்டாச்சாரியார்கள் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.
நேற்று மாலை கொடியேற்றமும் இரவு பெரிய சேஷ வாகனமும் இன்று காலை சின்ன சேஷ வாகத்திலும் பெருமாள் எழுந்தருளினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement