dinamalar telegram
Advertisement

அப்பாவி மக்களின் கதி!

Share

அப்பாவி மக்களின் கதி!



பயிர் கடன் வழங்குதல், கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடில் சமீபத்தில் நடந்தது. இதில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி
பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'மக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வருகின்றன. அலுவலர்கள், சட்டத்துக்கு அப்பால் உள்ளதை தவிர, தீர்வு காண கூடிய கோரிக்கைகளை தாமதமின்றி, மக்களை அலைக்கழிக்காமல் செய்து தர வேண்டும். மக்களுக்கு வழிகாட்டியாக, அரசு அதிகாரிகள் விளங்க வேண்டும். மக்கள், நம்மை நம்பி தான் உள்ளனர்...' என்றார்.
அங்கிருந்த முதியவர் ஒருவர், 'மக்கள் பிரதிநிதி, மக்கள் ஊழியர் என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கு தான்... அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதியையும், அதிகாரியையும் நம்பி தான் அப்பாவி மக்கள் இருக்கணும் என்பதை அமைச்சர் தெளிவாக சொல்லிட்டார்...' என்றதும், சுற்றியிருந்தோர்
ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement