dinamalar telegram
Advertisement

'நடவடிக்கையை பார்த்தது இல்லை!'

Share

'நடவடிக்கையை பார்த்தது இல்லை!'



மதுரை அருகே கடச்சனேந்தலில், சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணியருக்கு வளைகாப்பு விழா சமீபத்தில் நடந்தது. பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, 'கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப் பதிவுத் துறையை சீரழித்து விட்டனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இத்துறையை செம்மைப்படுத்தி, பத்திரப் பதிவை எளிமைப்படுத்தி இருக்கிறோம். 'தினமலர்' நாளிதழில், 'பரமக்குடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைகேடு' என செய்தி வந்ததைக் கண்டு, உடனடியாக ஆய்வு செய்ய துறை செயலர், தலைவருக்கு
உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'ஆய்வு செய்ய உத்தரவிடும் கதை எல்லாம் பலமுறை பார்த்தாச்சு... நடவடிக்கை எடுத்ததை தான் பார்த்ததே இல்லை...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    பத்திரபதிவு துறையில் வசூல் கொழிப்பதால் தானே பதிவாளர்கள் முக்கியமான பதிவுதுறை ஆபீஸ்களுக்கு போட்டி போடுகிறார்கள். நல்ல வளமானஇடத்தை பிடிக்க மந்திரிகளுக்கு அட்வான்ஸாக கோடிகளில் புரளுகிறது.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆய்வு செய்து, 'வாங்கியதில்' ஒழுங்காகப் பங்கு கொடுக்குமாறு வலியுறுத்துவதுதான் நடவடிக்கை'

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement