dinamalar telegram
Advertisement

'இவர்களுக்கு பாடம் எடுக்கணும்!'

Share

'இவர்களுக்கு பாடம் எடுக்கணும்!'



ஆசிரியர் சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டம், அமைச்சர் மகேஷ் தலைமையில், சென்னையில் பள்ளி கல்வி இயக்குனரக வளாகத்தில் சமீபத்தில் நடந்தது. 120க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.மேடையின் முன் வரிசையில் அமைச்சர், அதிகாரிகளுக்கு சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் ஆசிரியர், பணியாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் இடைவெளியின்றி அமர வைக்கப்பட்டனர். யாருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவில்லை. 'சானிடைசர்' வழங்கவில்லை. சங்க பிரதிநிதிகள் கூட்டமாக சென்று, அமைச்சர் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.இதை பார்த்த பணியாளர் ஒருவர், 'கொரோனா தடுப்பு விதிகள் பற்றி, முதலில் இவர்களுக்கு பாடம் எடுக்கணும்' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement