dinamalar telegram
Advertisement

'ஈயம் பூசுன மாதிரி இருக்கணும்...'

Share

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூ.,- மற்றும் வி.சி., கட்சிகளை சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தனர். 'திருமுருகன்பூண்டியை நகராட்சியாக தரம் உயர்த்தியதை போல, அவிநாசி பேரூராட்சியையும் நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்' என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்வது குறித்து, அவர்கள் விளக்கினர்.
'இந்த முக்கிய கூட்டத்தில், தி.மு.க., நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லையே...' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்கள், 'அரசின் கொள்கை முடிவு சார்ந்த கோரிக்கை என்பதால் தி.மு.க.,வினர் பங்கேற்கவில்லை. ஆனால் எங்களது கோரிக்கையை அவர்கள் ஏற்கின்றனர்...' என மழுப்பினர்.

அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'இதை தான், ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும் என சொல்வாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நாலு பேர் முன் ஏதோவொரு தீர்மானம் போட்டோம் என்று காட்டிக் கொள்ள சொல்லி வைத்தால், அதை ஊதி பெருசாக்கி விடுகிறார்களே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement