dinamalar telegram
Advertisement

அரசியல்வாதிகளை நம்பாதீர்!

Share

அரசியல்வாதிகளை நம்பாதீர்!மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், திருப்பூரில் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழக அரசு, 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் மத்திய அரசின் 'கிடுக்கிப்பிடி'யில் சிக்கியிருந்ததால், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற இயலவில்லை. முதல்வர் ஸ்டாலின், அடுத்த ஆண்டுக்குள் விலக்கு பெற்றுத் தருவார்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தேவையில்லாத வாக்குறுதி கொடுத்து, மாணவர்களை படிக்க விடாமல் தடுத்து, திடீரென நீட் தேர்வு எழுதச் சொன்னால், அவர்கள் தடுமாறுவர் தானே... இந்த அரசியல்
வாதிகளின் வாக்குறுதிகளை நம்பாமல், நம் பிள்ளைகளை ஒழுங்கா படிக்க சொல்லணும்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

அவர் தான் தலைவர்!சிவகங்கையில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா, சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு தான் முழுமையாக இலவச தடுப்பூசியை வழங்குகிறது. தமிழகத்தில் கருணாநிதி படத்தை போட்டு, தி.மு.க., நிகழ்ச்சி போல தடுப்பூசி முகாம் நடத்துவது அருவறுக்கதக்க விஷயம். மத்திய அரசின் திட்டத்தில் பிரதமர் மோடியின் படம் இருக்க வேண்டும்.
'நாடு முழுவதும் தீபாவளி வரை ரேஷனில் மாதந்தோறும் ஒரு நபருக்கு அரிசி 5 கிலோ, பருப்பு 1 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், பிரதமர் மோடி படம் போட்டு விளம்பரம் செய்ய வேண்டும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'முன்னாள் முதல்வர் காமராஜரிடம், 'நாம செஞ்ச சாதனைகளை படமாக எடுத்து, ஊர் ஊராக போட்டு காண்பிக்கலாம்... 3 லட்சம் ரூபாய் செலவாகும்' என்றபோது, 'அந்த பணம் இருந்தால், இன்னும் 10 ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவேனே...' என்றார்; அவர் தான் தலைவர்... இவங்க, மக்கள் வரிப்பணத்துல தனக்கு தானே விளம்பரம் செஞ்சுக்கிறாங்க... இந்த கொடுமையை யார் தடுக்குறது...' என்றதும், சுற்றியிருந்தோர்
ஆமோதித்தனர்.

'எம்.எல்.ஏ., 'சீட்' எப்படி கிடைச்சது?'திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், தி.மு.க., மகளிர் அணி சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பங்கேற்றார்.விழாவில், திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேசுகையில், 'கனிமொழி அக்கா, பூந்தமல்லி, திருத்தணி தொகுதிகளுக்கு மட்டும் தன் தொகுதி நிதியில் இருந்து உயர்மின் கோபுர விளக்குகள் ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்காங்க... திருவள்ளூருக்கு மட்டும் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை' என, ஆதங்கப்பட்டார்.இதையடுத்து கனிமொழி பேசும் போது, 'உங்களுக்கு, நான் எதுவும் கொடுக்க மாட்டேன். உங்களுக்கு நிதி கொடுக்க நிறைய பேர் தயாராக உள்ளனர். ஏன்... நீங்களே செய்து கொள்ளலாம்' என பதிலளித்தார்.கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர், 'கருணாநிதி குடும்பத்தினரிடம் நிதி கேட்கலாமா... கொடுக்கணும்; இது தெரியாமல், இவர் எப்படி எம்.எல்.ஏ., 'சீட்' வாங்கினார்?' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தொகுதி நிதியிலிருந்துதானே செய்கிறார்? கைக்காசைக் கொடுத்துவிட்டது போல் எதற்கு இந்த அலட்டல்?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement