dinamalar telegram
Advertisement

அங்கீகாரம் கிடைக்கலையே!

Share

அங்கீகாரம் கிடைக்கலையே!



தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'நீட் தேர்வால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் எந்த விதமான குழப்பமும் அடையக் கூடாது. எனவே ஆளுங்கட்சியை சேர்ந்தோரும், அதன் கூட்டணி கட்சியினரும், நீட் தேர்வை அரசியலாக்கக் கூடாது. கல்வியில் அரசியலை புகுத்துவது தவறான செயல்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து, இவர் ஒருத்தர் தான் சரியாக சொல்கிறார்... ஆனால், இவருக்கு அரசியலில் சரியான அங்கீகாரம் கிடைக்க மாட்டேங்குதே...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    லட்சம் பேரில் ஒரு தற்கொலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்கள் எல்லாம் கதி கலங்கி நிற்பது போன்ற பிம்பத்தை உண்டாக்கி, தாங்கள்தான் ரட்சகர் என்ற பாவ்லா காட்டுகின்றன முந்தைய, இன்றைய அரசுகள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement