dinamalar telegram
Advertisement

பல குடும்பங்களுக்கும் உதவியாக இருக்கிறது!

Share

உடுமலைப்பேட்டை அருகே உள்ள மொடக்குப்பட்டியில் 'பிரெஸோ' என்ற பெயரில் செக்கு எண்ணைய் 'பிசினஸ்' செய்து வரும் சிந்து அருண்: பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். வீடே உலகமாக இருந்த நான், பி.டெக்., முடித்ததும் இங்கிலாந்துக்கு போய் எம்.எஸ்., படிக்க ஆசைப்பட்டேன்.

பெற்றோர் மறுத்தனர். அதில் உறுதியாக இருந்ததால் வங்கியில் கடன் வாங்கி இங்கிலாந்துக்கு படிக்க அனுப்பினர்.இங்கிலாந்தில் பகுதி நேரமாக வேலை பார்த்தபடியே மேற்படிப்பு படித்தேன். அதிகாலை 1:00 மணி வரை வேலை பார்த்து, தங்கியிருந்த இடத்துக்கு போக வேண்டியிருக்கும். அந்த சூழ்நிலை தான் தன்னம்பிக்கை, தைரியம், எதையும் சுலபமாக செய்து முடிக்கக் கூடிய திட்டமிடல் என பல 'பாசிட்டிவ்' விஷயங்களை பழக உதவியாக அமைந்தது. இங்கிலாந்தில் படித்து முடித்ததும், இரண்டு ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினேன்.ஊர் திரும்பியதும் 'இ- - காமர்ஸ் பிசினஸ்' ஆரம்பித்தேன். அதில் வெற்றி பெற முடியாமல் 25 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. தோல்வி தந்த பாடங்களுடன் எதையாவது செய்ய யோசித்துக் கொண்டு இருந்த நேரத்தில் திருமணம் நடந்தது.ஆரம்பத்தில் என் கணவர் வெவ்வேறு வணிகத்தில் இருந்தார். கணவரின் சித்தப்பா தேங்காய், கொப்பரை வணிகத்தை சிறு அளவில் செய்து வந்தார். அதை பெரிய அளவில் செய்ய திட்டமிட்டார் கணவர்.தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் பல பெரிய நிறுவனங்களுக்கு கொப்பரையை கொள்முதல் செய்து அனுப்பினார். அவருக்கு துணையாக ஐந்து ஆண்டுகள் வணிகத்தில் இருந்தேன். மூலப் பொருட்கள் நம்மிடையே இருக்கும்போது செக்கு எண்ணெய் தயாரிக்கலாமே என்ற எண்ணம் தோன்றவே, 'பிரெஸோ' என்ற பெயருடன் ஆரம்பித்தேன்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தயாரித்து வருகிறேன்.கடந்த 2018-ல், 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் எண்ணெய் தயாரிப்பைத் துவங்கிய பின், லாபம் எடுக்க இரண்டு ஆண்டுகள் உழைக்க வேண்டிஇருந்தது. இப்போது ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் 'டேர்ன் ஓவர்' செய்யும் நிறுவனமாக உருவாக்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.விரைவில் ஒரு லட்சம் 'பிசினஸ் பார்ட்னர்'களுடன், உலகம் முழுக்க தயாரிப்புகளை கொண்டு சேர்க்க திட்டமிட்டு வருகிறேன்.

2022-க்குள் 10 லட்சத்துக்கும் மேலான பயன்பாட்டாளர்களை சென்றடையவும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 'குளோபல் பிராண்ட்' ஆக உருவாக்கும் குறிக்கோளையும் நிர்ணயித்து செயல்பட்டு வருகிறேன்.இந்த தொழில் என் குடும்பத்துக்கு கூடுதல் வருமானம் தருவதுடன், பணப் பற்றாக்குறை உள்ள பல குடும்பங்களுக்கும் கூடுதல் வருமானம் பெற உதவியாக இருக்கிறது.தொடர்புக்கு: 94884 67282

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    வாழ்த்துக்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement