dinamalar telegram
Advertisement

தெலுங்கு பூமியில் பதுக்கப்பட்ட 'மாஜி'யின் பணம்!

Share

தெலுங்கு பூமியில் பதுக்கப்பட்ட 'மாஜி'யின் பணம்!
டீக்கடை ரேடியோவில், 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...' என்ற பாடல் ஒலிக்க, ரசித்தபடியே அமர்ந்த அண்ணாச்சி, ''ஆறு வருஷம் களி திங்கணும்னு மிரட்டுனதால, ஆடிப் போயிட்டாங்கல்லா...'' என, அரட்டையை ஆரம்பித்தார்.

''யாரை, யார் ஓய் மிரட்டினது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''மதுரை மாவட்டத்துல 420 கிராம ஊராட்சிகள் இருக்கு... சில ஊராட்சிகள்ல தலைவர்கள், எழுத்தர்கள், அதிகாரிகளோட கூட்டு சேர்ந்து வீடுகளுக்கு, 'பிளான் அப்ரூவல்' வழங்குறதுல செமத்தியா வசூல் வேட்டை ஆடியிருக்காவ வே...


''அதுவும் இல்லாம, சில பெண் தலைவர்களின் கணவர், மகன்கள், ஊராட்சி நிர்வாகத்துல தலையிட்டிருக்காவ... இது பத்தி எல்லாம், கலெக்டர் அனீஷ் சேகருக்கு புகார்கள் போச்சு வே...

''உடனே, 'முறைகேடுல ஈடுபடுறவங்க மேல கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... பெண் பிரதிநிதிகளின் கணவர், மகன், உறவினர்கள் நிர்வாகத்துல தலையிட்டா, அவங்க மேல வழக்கு பதிவு பண்ணி, ஆறு வருஷம் வரைக்கும் சிறை தண்டனை வாங்கி தரப்படும்'னு எச்சரிக்கை குடுத்துட்டாரு...


''இதனால, ஊராட்சி தலைவர்கள் பலரும் கதிகலங்கி போயிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.


''டிரான்ஸ்பர்ல வந்த உடனே வசமா சிக்கிட்டார் ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்குள் நுழைந்தார் குப்பண்ணா.


''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.


''போன வாரம், திருச்சி சிட்டியில போலீசார் வாகன சோதனை நடத்திண்டு இருந்தா... ஒரு காரை நிறுத்தி 'செக்' பண்றச்சே, 11 லட்சம் ரூபாய் இருந்தது ஓய்... அதுல இருந்த 'டிப்டாப்' ஆசாமி ஒருத்தர் இறங்கி ஓடிட்டார்...


''விசாரிச்சப்ப, இறங்கி ஓடினது உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., ரவிச்சந்திரன்னு தெரிய வந்தது... விஜிலென்ஸ் போலீசார் தான், தன்னை மடக்கிட்டாங்கன்னு நினைச்சு, டி.எஸ்.பி., தப்பி ஓடியிருக்கார் ஓய்...


''இது சம்பந்தமா டி.ஜி.பி.,க்கு அறிக்கை போகவே, இப்ப ரவிச்சந்திரனை காத்திருப்போர் பட்டியல்ல வச்சிருக்கா... சமீபத்துல தான் இந்த பிரிவுக்கு 'டிரான்ஸ்பர்ல' வந்திருந்தார்... 'வந்ததுமே வேலையை காட்டி மாட்டிண்டுட்டாரே'ன்னு சக போலீசார் சலிச்சுக்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''மாஜியின் பணம் மாநிலம் தாண்டி போயிடுச்சுங்க...'' என கடைசி தகவலுக்கு, 'லீடு' தந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...


''கோவையில, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் வீடு, அவருக்கு நெருக்கமானவங்க வீடுகள்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் 'ரெய்டு' நடத்தினாங்க... ஆனா, பெருசா எதுவும் சிக்கலை...

''ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, சென்னையில ஒரு கான்ட்ராக்டர் வீட்டுல வருமான வரி சோதனை நடந்தப்ப சிக்கிய டைரியில, 'மாஜி'க்கு 900 கோடி ரூபாய் கமிஷன் தந்த விபரம் இருந்தது... அந்த பணம் எல்லாம் சிக்கும்னு நினைச்ச லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏமாற்றமா போயிடுச்சுங்க...

''மாஜி சம்பாதிச்ச பணம் எல்லாம் எங்கேன்னு உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினாங்க...

''அதுல, கரூர் பைனான்சியர், சேலம் முக்கிய புள்ளிக்கு நெருக்கமானவரின் சம்பந்தி தான், பணத்தை பதுக்க உதவி செய்தார்ங்கற தகவல் கிடைச்சிருக்கு...


''கடைசியா கிடைச்ச தகவல்படி, 'மாஜி'யின் பணம், ஆந்திரா, தெலுங்கானாவுல பதுக்கப்பட்டிருக்கிறதா சொல்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்சுக்கு வந்த புதியவர்களை பார்த்து நாயர், ''வேலுமணி, அன்பு, இளங்கோவன் வாங்க... ரொம்ப நாளா பார்க்கவே முடியலையே...''
என உபசரித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எல்லா மணிகளுக்கும் அரசு மாறப்போகிறது என்ற அபாய எச்சரிக்கை மணி அடித்து, ஆவந செய்து முடித்தபின் சினிமா போலீஸ் போல கடைசியில் சோதனைக்கு வந்தால் என்ன கிடைக்கும்

  • Kalyanaraman - Chennai,இந்தியா

    இன்றைய நிலையில் அனைத்து கருப்புப் பணமும் க்ரிப்டோவாக மாறியிருக்கும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement