dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி: ஜாதி, மத அடையாளங்களைக் கடந்து 'தமிழர்கள்' என்ற பொது அடையாளத்தின் கீழ் நம்மை ஒன்றிணைத்து, தமிழினத்தை அதிகாரம் நோக்கி அழைத்துச் சென்றவர் அண்ணாதுரை. அவர் தன் வாழ்நாளெல்லாம் டில்லியின் ஆதிக்கத்திற்கு எதிராக முன்னெடுத்த உரிமைப் போராட்டத்தை தொடர்வது தான், அவருக்கு நாம் செலுத்தும் உரிய மரியாதையாகும்.


'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால், தமிழகம் ஒன்றாக அல்லவா இருக்க வேண்டும்; 30 கட்சிகளுடன் பிரிந்து தானே கிடக்கிறது... தமிழினத்திற்கு எப்போது அவர் அதிகாரம் பெற்றுத் தந்தார்... குறிப்பிட்ட சிலருக்கு பெற்றுத் தந்தார் என்பது தான் சரியாக இருக்கும். மேலும், அவர் சொன்னார் என்பதற்காகத் தான், டில்லியை எதிர்க்கிறீர்கள் என்கிறீர்களே... அவர் அறிவித்த ரூபாய்க்கு 3 படி அரிசி திட்டம், மாநில சுயாட்சி போன்றவற்றை எப்போது நிறைவேற்ற போகிறீர்களோ என்பதே நடுநிலையாளர்களின், 'டவுட்!'


ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்:
நாகாலாந்தில் பிரிவினைவாத பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட், நக்சல், கிறிஸ்துவ கூட்டு சதி இயக்கம் ஆகியவற்றை ஒடுக்கி, அமைதியை நிலைநாட்டியவர் தமிழக கவர்னராக அறிவிக்கப்பட்டுள்ள ரவி. எனவே தான், தமிழக பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜ், திருமாவளவன், காங்கிரஸ் அழகிரி உள்ளிட்டோர் அவரை எதிர்க்கின்றனர்.


'டவுட்' தனபாலு: தமிழக கவர்னராக ரவி பொறுப்பேற்ற உடன், இந்த கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் தங்களின் பிரிவினைவாத பேச்சுகளையும், செயல்களையும் நிறுத்திக் கொள்வரோ என்ற, 'டவுட்' வருகிறது. ஏனெனில் அவர் வருவதற்கு முன்பே, அவரைப் பார்த்து கடுமையாக பயப்படும் இவர்கள், வந்த பிறகு ஒடுங்கி விடுவரோ?


பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி:
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தோம். அனைவரும் ஒருமித்த கருத்தாக, தனித்து போட்டியிடுவோம் என்ற முடிவை தெரிவித்தனர். இது ஒரு இடைக்கால முடிவு தான்; தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., நீடிக்கிறது.


'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாவட்டங்களில், பா.ம.க., அசுர பலம் பெற்று விட்டதோ; பிற கட்சிகளை எல்லாம் தோற்கடிக்கும் அளவுக்கு ஓட்டு பெற்று விடுமோ என்பன போன்ற பல, 'டவுட்'டுகளை உங்கள் மாவட்ட நிர்வாகிகள் ஏற்படுத்தி விட்டனரே!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    எங்கே அம்மைய்யார் வெகு காலமாக சைலண்ட்டாக இருந்தார்கள். இப்போ ( குடும்ப சண்டையை ஒரு பக்கம் வைத்து) புத்துயிர் கொடுக்க படையுடன் வளம் வருவார்கள்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அதாவது கூட்டணியில் இருப்போம், ஆனால் தனி அடுப்பு, தனி சாப்பாடு, நாங்கள் இன்னும் கூட்டுக் குடும்பம்தான் என்கிறார். கட்சியால் வேண்டிய ரா. ச சீட் வாங்கியாயிற்று. மெல்ல மெல்லக் கழட்டிக்கொள்ள இது ஆரம்பம்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement