dinamalar telegram
Advertisement

'இப்போதாவது புரியுதா?

Share

'இப்போதாவது புரியுதா?



மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 13 பேருக்கு, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கல்வித் துறை சார்பில் பாராட்டு விழா சமீபத்தில் நடந்தது.மதுரை தெற்கு தொகுதி ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., பூமிநாதன் பேசுகையில், 'நான் படிக்காத கஷ்டத்தை, சிறையில் இருந்த போது உணர்ந்துக் கொண்டேன். எங்கள் கட்சி பொதுச் செயலர் வைகோவுடன், 'பொடா' சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன். 'அப்போது அவரை பார்க்க, அப்போதைய ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் வருவர். அவர்கள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பர். எனக்கு ஆங்கிலம் தெரியாததால், அவர்களின் வாயை பார்த்து கொண்டிருப்பேன்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'சிறையில் இருக்குறதுக்கே, இன்னொரு மொழி தெரியாமல் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே... வாழ்வாதாரத்திற்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் எங்கள் பிள்ளைகளை, இன்னொரு மொழியை படிக்க விடாமல்தடுத்தது தப்புன்னு, இப்போதாவது திராவிட அரசியல்வாதிகளுக்கு புரியுமா?' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement