dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: தேர்தல் கமிஷன் நடத்திய கட்சிகளின் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்து எதுவும் கூறவில்லை. தற்போது இரண்டு கட்டங்கள் என அறிவித்துள்ளனர். ஒரு கட்ட தேர்தல் முடிந்த பின், அடுத்த கட்ட தேர்தலில், ஆளும் கட்சி ஆட்களை வைத்து கள்ள ஓட்டு போட வாய்ப்பு அதிகம்.


'டவுட்' தனபாலு: ஊரக உள்ளாட்சி தேர்தல் எத்தனை கட்டங்களாக நடந்தாலும், ஒரு சில இடங்களில் மட்டும் தான் அ.தி.மு.க., வெற்றி பெறப் போகிறது; பிற இடங்களை தி.மு.க., தான் கைப்பற்ற உள்ளது. அந்த அளவுக்கு 'பிளான்' பண்ணி, தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றி வருகிறது. எனவே இரண்டு கட்டங்கள், கள்ள ஓட்டு என்பதெல்லாம் எடுபடப் போவதில்லை என்பதில், யாருக்கும், 'டவுட்'டே வராது!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
: 'இந்தியர்கள் அனைவரும், அலுவல் மொழியான ஹிந்தியுடன், தாய்மொழியையும் பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். இது, மறைமுகமாக ஹிந்தியை திணிக்கும் செயலாகும்; இது தவறு. அவ்வாறு கூறக் கூடாது!


'டவுட்' தனபாலு: தாய்மொழியுடன் ஹிந்தியையும் சேர்த்து தானே படிக்க வேண்டும் என, அமித் ஷா சொல்கிறார்... ஹிந்தியை மட்டும் படிக்க வேண்டும் என அவர் சொல்லவில்லையே... போகிற போக்கை பார்த்தால், ஹிந்தி என்ற வார்த்தையையே எங்களிடம் கேட்டுத் தான் தேசிய தலைவர்கள் பேச வேண்டும் என வலியுறுத்துவீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல் ஹாசன்
: ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு, 'நீட்' தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க, இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு நாடு; இது ஒரு தேர்வு; இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு... சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!


'டவுட்' தனபாலு: இதையே இப்படி மாற்றியும் சொல்லலாம். 'தேர்வு எழுத கஷ்டப்படும் மாணவர்கள்; அதை வைத்து அரசியல் செய்யும் அரசு; அதை நம்பும் மாணவர்கள்... கஷ்டமடா; இதுவா நாடு...' என்றும் நீங்கள் கூறலாம். எனினும், தமிழக கட்சிகள் போலவே நீங்களும் சிந்திப்பதால், இவ்வாறு கூற மாட்டீர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (5)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    இதையே இப்படி மாற்றியும் சொல்லலாம். 'தேர்வு எழுத கஷ்டப்படும் மாணவர்கள் நீட் .தேர்வு இல்லாமல் " ஒரு டாக்டர் ஆக தேவைப்படும் Knowledge இல்லாமலேயே டாக்டராகி பொதுமக்களின் உயிருடன் விளையாடுவது நல்லதா" ??

  • Suppan - Mumbai,இந்தியா

    இந்த தனுஷ், கனிமொழி போன்றவர்கள் கோழைகள். மனதிடம் இல்லாதவர்கள்.மருத்துவம் படிக்கவே லாயக்கற்றவர்கள். மருத்துவம் மட்டும்தான் படிப்பு என்ற வடிகட்டிய அறிவிலித்தனத்துக்கு விலை போனவர்கள். இவர்களை வைத்து அரசியல் செய்பவர்கள் அயோ க்கியர்கள்.

  • Suppan - Mumbai,இந்தியா

    Please don't repeat the same comments

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எம் பி பி எஸ் ஆண்டு தேர்வுகள், பொதுத் தேர்வுகள் எல்லாவற்றிலும் தான் வினாத்தாள் லீக், ஆள் மாறாட்டம், காசுக்கு விடைத்தாள் எல்லாம் நடக்கிறது இல்லாத தேர்வுகளையும் ஒரேயடியாக ரத்து செய்துவிடலாம் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களும் முட்டாள்கள், அப்படித்தானே

  • gopal - chennai,இந்தியா

    Kamahasan speaks nonsense only to show that he is still relevant.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement