dinamalar telegram
Advertisement

போலி 'பர்மிட்'டில் கிராவல் மண் கொள்ளை!

Share

போலி 'பர்மிட்'டில் கிராவல் மண் கொள்ளை!''தி.மு.க.,வுக்கு பதிலடி தர தயாராகிட்டு இருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அந்தோணிசாமி.

''அ.தி.மு.க.,வினரை சொல்றீரா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''அவங்களே இருக்கிற இடம் தெரியாம, அடக்கி வாசிக்கிறாங்க... நான் சொல்ல வந்தது பா.ஜ.,வினரை பத்தி... மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்துக்கு எதிரா சட்டசபையில, தீர்மானம் நிறைவேற்றி இருக்காங்களே...

''இதுக்கு பதிலடி தர பா.ஜ., தரப்பு தயாராகிடுச்சு... தி.மு.க.,வுல இருந்து பா.ஜ.,வுக்கு போயிருக்கிற, 'மாஜி' எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் ஏற்பாட்டுல, வேளாண் சட்டங்களால, விவசாயிகளுக்கு கிடைக்கிற பயன்களையும், பிரதமர் மோடியையும் பாராட்டி தமிழ், ஹிந்தி மொழிகள்ல பாடல்கள் பாடி, 'சிடி'க்களா தயார் செய்திருக்காங்க...

''வர்ற 17ம் தேதி, பிரதமர் மோடியின் பிறந்த நாள் வருதுல்ல... அன்னைக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை வச்சு, 'சிடி'க்களை வெளியிட இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''விரும்பின இடத்துக்கு மாறுதல் வேணும்னா, 30 ஆயிரத்தை வெட்டுங்கன்னு கேட்காவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.

''எந்த துறையில பா...'' என்றார் அன்வர்பாய்.

''தமிழகம் முழுக்க, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 33 ஆயிரம் ரேஷன் கடைகளை நடத்துது.... இதுல பல ஊழியர்கள், ஒரே கடையில, அஞ்சு வருஷத்துக்கு மேலா வேலையில இருக்காவ வே...

''இவங்கள்ல யார் யாரெல்லாம் பொருட்கள் வாங்காத கார்டுதாரர்கள்னு விபரத்தை தெரிஞ்சு, அவங்க பெயர்கள்ல பொருட்களை பதிவு செய்து, கள்ளச்சந்தையில வித்துடுதாவ... இதனால, ஒரே கடையில தொடர்ந்து மூணு வருஷத்துக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை வேறு கடைகளுக்கு மாத்தும்படி கூட்டுறவு துறை, ஜூலை மாசம் உத்தரவு போட்டுச்சு வே...

''ஆனா, இதுல குறுக்கே புகுந்த தி.மு.க., தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர், விரும்பிய கடைக்கு இடமாறுதல் வாங்கி தர்றதா சொல்லி, ஒரு ஊழியரிடம், தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்காவ... இடமாறுதல்ல, சிபாரிசை ஏற்காத அதிகாரிகளையும் மிரட்டுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''போலி 'பர்மிட்'களை குடுத்து, லட்சம் லட்சமா சாப்பிட்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பக்கத்துல பத்தலைப்பேட்டையில, அரசு அனுமதியுடன் கிராவல் மண் குவாரி செயல்படறது... இங்க சமீபத்துல, ஐ.ஜி., பாலகிருஷ்ணன் சோதனை நடத்தினார் ஓய்...

''அப்ப, நாலு டிப்பர் லாரிகளை கிராவல் மண்ணுடன் பறிமுதல் செய்தார்... அவா பர்மிட் ஒண்ணை எடுத்து காட்டியிருக்கா... ஆனா, அது போலின்னு தெரிஞ்சுடுத்து ஓய்...

''இதை, கனிமவள அதிகாரியும் ஒத்துண்டார்... போன அ.தி.மு.க., ஆட்சியில மணல் விவகாரத்துல கோலோச்சிய புதுக்கோட்டை ஆசாமி ஒருவரின் தரப்பு தான், போலி பர்மிட் அச்சிட்டு, கனிமவள உயர் அதிகாரி, போலீஸ் அதிகாரி உதவியுடன் மணல் கடத்தல்ல ஈடுபட்டிருக்கு ஓய்...

''இதுக்காக, ரெண்டு அதிகாரிகளுக்கும் 25 லட்சம் ரூபாய் கைமாறியிருக்கு... இந்த தகவல்களை கேள்விப்பட்ட ஐ.ஜி., பாலகிருஷ்ணன், நொந்து போயிருக்கார் ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.

''பாலமுருகன், சுரேஷ்குமார் இங்கன உட்காருங்க...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர், விரும்பிய கடைக்கு இடமாறுதல் வாங்கி தர, ஒரு ஊழியரிடம், தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்காவ... இடமாறுதல்ல, சிபாரிசை ஏற்காத அதிகாரிகளையும் மிரட்டுகிறார்களாம். இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு உளவுத்துறை கொண்டு போகாமலிருக்குமா? ?

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    எப்பவோ கருணாநிதி தான் முதலமைச்சராக இருந்த பொது சொன்னது " ( கையூட்டு)கொடுக்கவேண்டியத்தை கொடுத்து பெற வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னது பலருக்கு நினைவிருக்கலாம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement