dinamalar telegram
Advertisement

'வாலாட்ட முடியாது!'

Share

'வாலாட்ட முடியாது!'



திருப்பூர் சாமுண்டிபுரம் குலாம்காதர் கார்டன் பகுதிவாசிகள் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி உதவி கமிஷனர் சுப்ரமணி, குடிநீர் லாரியை வரவழைத்ததும், மறியல் கைவிடப்பட்டது.அப்போது அங்கு வந்த கம்யூ., முன்னாள் கவுன்சிலர் ரவிச்சந்திரன், 'மாநகராட்சி கமிஷனர் நேரில் வந்து தடையின்றி குடிநீர் கிடைப்பதாக உறுதியளிக்க வேண்டும்' என்றதால், மீண்டும் மறியல் போராட்டம் தொடர்ந்தது.அங்கு வந்த தி.மு.க.,வினர், 'உள்ளாட்சி தேர்தலுக்காக, கம்யூ., கட்சியினர் போராட்டம் நடத்துறாங்க...' என குற்றம் சாட்டினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கு காலி குடத்துடன் நின்றிருந்த பெண் ஒருவர், 'நாங்க குடிக்க தண்ணீர் கேட்டு போராடுறோம்... அதுல நீங்க ஓட்டு கணக்கு பார்க்குறீங்களா... எந்த கட்சியினரும் வர வேண்டாம்... நாங்களே எங்களுக்காக போராடிக்கிறோம்...' என்றதும், கூட்டம் கலைந்தது.
அங்கிருந்த முதியவர் ஒருவர், 'சபாஷ்... மக்கள் இப்படி இருந்தால், அரசியல்வாதிகள் வாலாட்ட முடியாது' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement