dinamalar telegram
Advertisement

அடுத்த கட்டத்தைப் பார்க்கணும்!

Share

விவாகரத்து தொடர்பாக கூறும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி: நம்முடைய சமூக அமைப்பில், விவாகரத்து என்பது குற்றச்செயலாக, குடும்ப கவுரவத்தைச் சீர்குலைக்கும் விதமாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், குடும்ப நீதிமன்றங்கள் துவங்கப்பட்டவுடன், சமூகத்தின் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் விவாகரத்து வரை செல்வதில் தவறில்லை என்ற மனநிலை ஓரளவுக்கு வந்துள்ளது.


இருப்பினும், 'அந்தக் காலத்துல நாங்கெல்லாம், 'அட்ஜஸ்ட்' பண்ணிட்டு வாழலையா' என்று, மகளுக்கு அறிவுரை கூறும் பெற்றோரும் உள்ளனர். இந்தப் பார்வையில் மாற்றம் வர வேண்டிய நேரம் இது.இன்று, குடும்ப வன்முறை செய்கிற ஆணோடு வாழ மாட்டேன் என்று சொல்லும் துணிச்சல், பெண்களுக்கு வந்துள்ளது. கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரமே இதற்கு காரணம். விவாகரத்தானால், குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து விடுவரோ என்ற அச்சம் காரணமாகவும் பல பெண்கள், அனைத்தையும் பொறுத்துக் கொள்வர்.இப்போது, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி, தாயிடம் தான் குழந்தை ஒப்படைக்கப்படும். அதோடு, ஒரு பெண், குடும்ப வன்முறைக்கு ஆளானது நிரூபிக்கப்பட்டால், அவள் வசிக்கும் வீட்டு வாடகையைக் கூட அந்த ஆணையே கொடுக்க வைக்க முடியும்.ஒரு பெண்ணுக்கு அவருடைய வாழ்க்கை தான் முக்கியம். பாலியல் வன்முறையையோ, அடிமைத்தனத்தையோ, சுய மரியாதையின்மையோ, பாலியல் அதிருப்தியையோ சகித்து, அந்தப் பந்தத்தை அவள் தொடர வேண்டிய அவசியமில்லை.

அதே நேரம், பழகியவுடனே திருமணம் செய்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு முன்பே விவாகரத்து செய்கிற பெண்களும் இருக்கின்றனர். இவையெல்லாம் தவிர்க்கப்படக் கூடியவை.அதீத குடிப்பழக்கம், வன்முறை, திருமணம் தாண்டிய உறவு ஆகியவை இருந்தால், அந்த உறவைத் தொடர வேண்டியதில்லை. ஆனால், தேவைப்படும் இடங்களில் விட்டுக் கொடுத்தல், இருவரும் விட்டுக் கொடுத்து, புரிந்து கொண்டு வாழ முடியும். அவற்றுக்கெல்லாம் விவாகரத்து வரை யோசிக்க வேண்டியதில்லை.

திருமணம் என்பது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான ஒப்பந்தம். இருவருடைய வாழ்க்கைப் பாதையிலும் அது ஒரு பகுதி. அந்தப் பாதையில் வரும் இடையூறுகளை இருவரும் சேர்ந்து களைந்து கடப்பது தான் அந்தப் பயணத்தை நிறைவு செய்யும்.மாறாக கொஞ்சம் கூட சரிப்பட்டு வராத அந்தப் பயணத்தை, கஷ்டப்பட்டு கடப்பதைத் தவிர்த்துவிட்டு, வாழ்வின் அடுத்தக்கட்டத்தைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • V.B.RAM - bangalore,இந்தியா

    இந்தப் பார்வையில் மாற்றம் வர வேண்டிய நேரம் இது?? ஆமாம் அப்பத்தான் உனக்கு வரும்படி வரும் நம் தேசம், குடும்பம் நாசமாக போகும்.

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    மேல்நாட்டு கலாச்சாரம் எப்போது உள்ளே புகுந்ததோ அன்றே நம் குடும்ப உறவுகளில் விரிசல் வந்து விட்டது. இதில் மீடியாவின் (தொலை காட்சி) பங்கு மிக அதிகம். சீரியல்களில் குடும்ப உறவை சீர்குலைக்கும் காட்சிகளே அதிகம் வருகின்றன.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement