dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: பொதுத்துறை தனியார்மயத்தை கண்டிப்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 19 கட்சிகள் சார்பில், வரும் 20 முதல் 30 வரை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் தமிழகத்தில், 20ம் தேதி அவரவர் வீட்டு வாசல் முன் கறுப்புக் கொடி ஏந்தி, போராட்டம் நடக்கும்.


'டவுட்' தனபாலு: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது உங்கள் கட்சியாகத் தான் இருக்குமோ என்ற, 'டவுட்' எழுகிறது. ஏனெனில், எதற்கெடுத்தாலும் பத்து பேர் கையில் சிகப்பு கொடியை கொடுத்து, 'ஜிந்தாபாத்' போட வைக்க முடியாமல் போய் விட்டதே... உங்களைப் போல வேறு வேலையில்லாத எதிர்க்கட்சிகள் தான், இந்த பத்து நாட்கள் தொடர் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனவோ என்ற, 'டவுட்'டும் வருகிறது!


முதல்வர் ஸ்டாலின்:
'நீட்' நுழைவுத் தேர்வு அச்சம் காரணமாக, தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துள்ளார். மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்து தரும் பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது. அதை உணர்ந்து, நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும் வரை, சட்ட போராட்டம் தொடரும். மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்.


'டவுட்' தனபாலு: பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு பயந்து சில மாணவர்கள் தற்கொலை செய்வது போன்ற விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். அதற்காக, அந்த தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்து விடுகிறதா... வேலைக்கான போட்டி தேர்வுகள், நீட் தேர்வை விட கடினமாக இருக்கும்... அந்த தேர்வுகளை ரத்து செய்து விடுவீர்களா... எனவே, மாணவர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு சரியான அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என்பது தான், இந்த நேரத்தில் தேவையானது என்பதில், யாருக்கும், 'டவுட்'டே இல்லை!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
மாணவர்கள் தங்களின் உயர்கல்வி குறித்த பார்வையை விசாலப்படுத்த வேண்டும். மருத்துவம் மட்டுமே உயர்கல்வி அல்ல. அதை விட சிறந்த வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய படிப்புகள் பல உள்ளன.


'டவுட்' தனபாலு: இதற்கெல்லாம் காரணம், உங்களைப் போல மருத்துவம் படிக்காத சில அரசியல் தலைவர்கள், தங்கள் பெயருக்கு முன், 'டாக்டர்' என போட்டுக் கொள்வது தான். அதன் மூலம் அந்த பதவி தான் மிகப் பெரியது என்ற மாயையை உருவாக்குகின்றனர். நம் தலைவர்கள் திருந்தினால், மாணவர்களும் திருந்தி விடுவரோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்துள்ளது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    இந்திய கம்ம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன் போராட்டம் பண்ணினாள் மற்றவர்களுக்கு ஏன் குளிரடிக்கிறது ? ஜனநாயக நாட்டில் எதிர்ப்பை காட்டினாள் தவறா ? கார்ப்பரேட்டுகளுக்கு கூஜா தூக்கும் சிலருக்கு எதுவும் புரியாது .

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    'அவர்கள்' காலத்தில் சில தற்கொலைகள் நடந்த போதும் இதே பல்லவியைப் பாடினார்கள் இப்போது உங்கள் முறை லட்சக்கணக்கில் எழுதியவர்களும் தெரியும், சில ஆயிரம் சீட்கள்தான் உள்ளன என்று ஆனாலும் நம்பிக்கையை விடாது எழுதத்தான் செய்கிறார்கள் டிஎன்பிஎஸ்சி யு பி எஸ் சி எல்லாவற்றுக்கும் இதே நிலைதான் நீட் ஒழிந்தால், எல்லாரும் டாக்டராக்கிவிடுவார்களா? பிள்ளைகளைக் குழப்பாமல் பெற்றவர்கள் அழுத்தம் கொடுக்காமல் அவரவர் விரும்பும் பாடத்தைப் படித்து அது துறைகளில் தேர்ச்சி பெற விடுங்கள், அதுவே போதும்

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    \\இதற்கெல்லாம் காரணம், உங்களைப் போல மருத்துவம் படிக்காத சில அரசியல் தலைவர்கள், தங்கள் பெயருக்கு முன், 'டாக்டர்' என போட்டுக் கொள்வது தான். \\ ........ மருத்துவரய்யா ராமதாசு ஒரு "doctor" அப்படின்னு நெறய வலைத்தளங்களில் போட்டிருக்கே ? அவர் மருத்துவரா, இல்லியா ??

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement