dinamalar telegram
Advertisement

கட்டடம் மேல் மரக்கன்று!

Share

கட்டடம் மேல் மரக்கன்று!


கோவையில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மாநிலத்தில் தற்போது 23.98 சதவீதம் தான் வனப்பரப்பு உள்ளது. அதை 33 சதவீதமாக அதிகரிக்க தொலைநோக்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 1 சதவீதம் வனப்பரப்பு அதிகரிக்கப்படும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தில் இருந்த அரசு புறம்போக்கு இடத்தை எல்லாம் அரசியல்வாதிகள் தான் ஆக்கிரமிச்சு இருக்காங்க... வனப்பரப்பை அதிகரிக்கணும் என்றால், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மேல் தான் மரம் நடணும்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement