dinamalar telegram
Advertisement

சிலை அமைப்பு துறை வருமோ!

Share

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நிருபர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், 'சென்னை பல்கலையில், அப்துல் ரகுமான் பெயரில் இருக்கை ஏற்படுத்த வேண்டும். காயிதே மில்லத் மணி மண்டபம், மருது பாண்டியருக்கு நுாலகத்துடன் மணி மண்டபத்தை அரசு அமைக்க வேண்டும்' என்றார்.

அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'கூட்டணி கட்சியினர் கேட்டதை எல்லாம் தி.மு.க., அரசு நிறைவேற்றி வருகிறது. இவர் கேட்பதையும் பார்த்தால், எப்படியும் ஆட்சி முடியுறதுக்குள்ள, தமிழகத்துல 50 ஆயிரம் சிலைகள் அமைக்கும் என நினைக்கிறேன்... சிலை அமைப்பு துறையை உருவாக்கி, அதுக்கு ஒரு அமைச்சரையும் நியமிக்கலாம்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தெருவுக்கு எட்டு சிலைகள், மெரீனா கொள்ளாமல் நினைவிடங்கள் அடேயப்பா.... தமிழன் உணவு உடை, உறைவிடம் எல்லாம் பூர்த்தியாகி, நிம்மதியாகி விட்டான்

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    ஆமாம், சிலை அமைப்பு துறையை உருவாக்கினால் அதற்க்கு என்று ஒரு அமைச்சர், செகிரேட்டரி, பணியாட்கள் என்று நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் சிலை பாதுகாப்பு துறை என்ற ஒன்றி உருவாக்கி, போலீஸ் மாதிரி ஒரு அமைப்பை ஏற்படுத்தினால் இன்னும் பலருக்கும் வெளி கிடைக்கும், சிலைகளும் பாதுகாப்பாக இருக்கும், சிலைகளில் யாரும் சாணி அடிக்க மாட்டார்கள், செருப்புமாலை போட மாட்டார்கள். ஆனால் வேலை வாய்ப்புகள் உருவாகும். எண்கள் கட்சி ஆட்சியில் இத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம். இப்படி பல நன்மைகள் அதில் இருக்கிறது.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement