dinamalar telegram
Advertisement

மலைகிராமங்களில் துப்பாக்கி சத்தம்!

Share

முன்னாள் முதல்வர் பழனிசாமி போல, ''இதெல்லாம் ரொம்ப தப்புங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

நாயர் கொடுத்த இஞ்சி டீயை உறிஞ்சியபடியே நண்பர்கள் சிரித்தனர். அந்தோணிசாமியே விஷயத்தை சொல்ல துவங்கினார்...

''ஆண்டுதோறும் டிச., 7ம் தேதி கொடிநாள் விழா நடக்குமுங்க... இதுக்காக மக்கள்கிட்ட நன்கொடை வசூலிச்சு, ராணுவ வீரர்களின் நலனுக்கு கொடுப்பாங்க... இது நல்ல விஷயம் தாங்க...

''இந்த வருஷம் 3 லட்சம் ரூபாய் கொடி நாள் வசூல் செய்யணுமுன்னு, சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அதிகாரிகள் முடிவு பண்ணிருக்காங்க...

''அதுக்காக பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், திருமண உதவி திட்டம், கர்ப்பிணி உதவிதொகைக்காக விண்ணப்பிக்க வர்ற ஏழைகளிடமும், 'கொடி நாள் நன்கொடை'ன்னு 1,000 ரூபாய் கட்டாய வசூல் பண்ணுறாங்களாமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''கட்டாயா வசூல் பண்ணுறது தப்பு தான் பா...'' என்ற அன்வர்பாய்,''மாநகராட்சியில எல்லையில்லாம லஞ்சம் வாங்குறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''எங்கேன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.

''கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு புதுசா வந்திருக்கற அதிகாரி, வரி வசூலர்கள் ஒவ்வொருத்தர்கிட்டேயும் எவ்வளவு லஞ்சம் வாங்குனீங்கன்னு நேரடியாவே கேட்குறாராம் பா...''அவங்க கொடுக்குற பட்டியலை பார்த்து, லஞ்சமா வாங்குன தொகையில, 80 சதவீதத்தை கொடுக்கணும்னு கறாரா சொல்றாராம் பா...

''அப்படியும் சந்தேகம் தீராம, அவரே சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு போன் செஞ்சு, எவ்வளவு பணம் கொடுத்தீங்கன்னு விசாரிக்கிறாராம்... லஞ்சம் கொடிகட்டி பறக்குறதை ஸ்ரீரங்க ரங்கராஜன் தான் தடுக்கணும் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''துப்பாக்கி சத்தம் கேட்டுண்டே இருக்கு ஓய்...'' என கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.

''நாட்டின் எல்லையில சண்டை நடக்குதா வே...'' என கேட்டார், அண்ணாச்சி.

''அது இல்லை... சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில தும்பல்பட்டி, நுாலாத்துகோம்பை, அடிமலைப்பட்டி, வேடப்பட்டி, ஜருகுமலை, ஜல்லுாத்துப்பட்டி, மஞ்சபாளி, நடுப்பட்டி என ஏகப்பட்ட மலைகிராமங்கள் இருக்கு ஓய்...

''அங்க இப்போ வசிக்கற மக்களோட முன்னோர்கள், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தினா ஓய்...''அங்கே இருக்கறவா வீட்டுல எல்லாம், பராம்பரிய சொத்தா பாட்டன் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கிகள் இருக்கு ஓய்...

''இப்போ வனவிலங்குகளை வேட்டையாடுறது இல்லை... ஒண்ணு ரெண்டு அப்பப்போ நடக்கும்...ஆனா பிரச்னை வேற ரூபத்துல கிளம்பியிருக்கு ஓய்...

''அதாவது பக்கத்து தோட்டத்துகாரருடன் மோதல், நிலப்பிரச்னை, குடும்ப சண்டைன்னு எது நடந்தாலும், அங்கே இருக்கற மக்கள் துப்பாக்கியை எடுத்து மிரட்டறா... சில நேரங்களில் துப்பாக்கி சூடும் நடக்கறது ஓய்...

''பெரிய அசம்பாவிதம் நடக்கறதுக்கு முன், அந்த மலைகிராமத்துல அனுமதியின்றி வைச்சிருக்கற கள்ளத்துப்பாக்கியை எல்லாம் பறிமுதல் செய்யறதுக்கு போலீசார் நடவடிக்கை எடுக்கணும் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    மாட்டமாட்டார்கள். இவர்கள் மேலிடத்தில் பங்கு உண்டு.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தினமலரும்தான் பப்ளிக்கா போரையும் சொல்லி லஞ்சம், கொள்ளை விவரம் கொடுக்கிறது ஆனால் எந்த அதிகாரியும் மாட்டுவதில்லையே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement