dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: சட்டசபையில், அமர்வதற்கு எனக்கு 'போர்' அடிக்கிறது. எதிர்க்கட்சிகள் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கக் கூடிய, அ.தி.மு.க.,வின் வேலுமணி, ஓ.பி.எஸ்., போன்றோரே தமிழக அரசை பாராட்டுகின்றனர். அவ்வளவு சிறப்பாக, தமிழக முதல்வர் ஆட்சி செய்து வருகிறார்.

'டவுட்' தனபாலு: சட்டசபையில் நீண்ட நேரம் உட்கார உங்களுக்கு 'போர்' அடிக்கத் தான் செய்யும். எனினும் வேறு வழிஇல்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு பின் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திச் செல்ல உங்களை தயார்படுத்துகின்றனர். ஆனால், உங்களுக்கு நடிப்பில் தான் அதிக நாட்டம் என்பது, 'டவுட்' இன்றி புரிகிறது. என்ன செய்ய... வருங்கால தி.மு.க., தலைவருக்கு இதெல்லாம் பழகிவிடும்!lllந

டிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்: என் மகன் விஜயை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதியை குறிப்பிட வேண்டிய இடத்தில், 'தமிழன்' என்றே குறிப்பிட்டேன்; முதலில் அதை ஏற்க மறுத்தனர். பள்ளியை மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என்றேன்; பின், விண்ணப்பத்தை ஏற்றனர். பள்ளியில் சேர்க்கும் போதே ஜாதியை தவிர்த்தால், அடுத்த 20 ஆண்டுகளில் ஜாதியே இல்லாமல் போய் விடும்.

'டவுட்' தனபாலு: 40 ஆண்டுகளுக்கு முன் இதை செய்துள்ளீர்கள். அதன் பின், தமிழகத்தில் ஜாதி ஒழிந்து விட்டதா... ஜாதி ஒழிப்பில் தீவிரமாக இருந்த ஈ.வெ.ரா.,வே முதலில், 'நீங்கள் எந்த ஜாதி' என்று தான் கேட்பார். நாட்டில் இன்னமும் ஜாதி அடிப்படையில் தானே வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனவே, ஜாதி மறுப்பு என்பது வசதியானவர் களுக்குத் தான் சரிப்பட்டு வருமோ என்ற, 'டவுட்' வருகிறது!

முதல்வர் ஸ்டாலின்:

சட்டசபையில் வெளியான அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்; எந்தவொரு திட்டமும் வெறும் அறிவிப்போடு நின்று விடாது. அமைச்சர்கள், அதிகாரிகளை நானே கண்காணிப்பேன். மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு திட்டத்திற்கும் முன்னுரிமை தந்து, அவற்றை நிறைவேற்றும் பணியில் நானே ஈடுபடப் போகிறேன்.

'டவுட்' தனபாலு: முதல்வர் ஆனது கூட பெரிய சிரமம் இல்லை. பழமும் தின்று கொட்டையும் போட்ட பல அமைச்சர்களை அடக்கி ஆளுவது தான் சிரமம் என முதல்வர் உணர்கிறாரோ; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறாரோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்து விட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (4)

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  தமிழ்நாட்டில் பிராமண ஜாதிமட்டும் இருக்கக்கூடாது. மற்ற ஜாதிகள் இருக்கலாம். 150 வருஷத்துக்கு முன்னால் ஜாதிகள் இல்லையடி பாப்பா என இளம்பருவ கண்மணிகளுக்கு இளம் பிராயத்திலியே உரமேற்றியவரே பிராமணர் என்பதை சமூகம் மதிக்க வேண்டும்.

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  அது தான் உதய நிதி அவர்கள் சட்டசபயில் முதல்வரின் பின்னால் எப்போதுமே ஒரு தூக்க கலகத்தில் அமர்ந்து கண்ணை கசக்கிக் கொண்ணும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறதே....

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  முதலில் மார்க்கெட், உணவகங்களில் பிரச்னை செய்வது, தண்டல் வசூலிப்பது என்று ஆட்டம்போடும் 'தொண்டர் படை', 'அவர்களுக்கு ' கொடுத்தது செல்லாது என்று ஒப்பந்தக்காரர்களைக் கசக்கிப்பிழியும் பிரதிநிதிகளை அடக்கிக் காட்டுங்கள் பார்க்கலாம் ருசி கண்ட பூனைகள் அப்படி அடங்குமா ? வந்ததே இதற்குத்தானே

 • duruvasar - indraprastham,இந்தியா

  நானே வருவேன் இங்கும் அங்கும் யாரென்று யார் அறிவார் நானே வருவேன் பாடல்தான் ஞாபகம் வருது.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement