dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

முதல்வர் ஸ்டாலின்:பாரதியாரின் நினைவு நாளான செப்., 11ம் நாளை, மகாகவி தினமாக கடைப்பிடிப்போம். அவர் வாழ்ந்த காசி வீட்டை, தமிழக அரசு பராமரிக்க நிதியுதவி வழங்கும். சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் வாரம்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அவரின் படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படும்.


'டவுட்' தனபாலு: ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட மகா கவிஞர் பாரதியாருக்கு, இன்னமும் நிறைய செய்யலாம். அவரின் புகழை இந்த அரசு மறுக்கவில்லை, மறக்கவில்லை என்பதை முதல்வரின் அறிவிப்புகள் காட்டுகின்றன. அதுபோல, எல்லா விவகாரத்திலும் குறுகிய அரசியல் செல்லுபடியாகாது என்ற உங்களின் எண்ணமும், 'டவுட்' இன்றி தெரிகிறது. எனினும், இது ரொம்ப் 'லேட்' தானோ என்ற டவுட்டும் வருது!தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி
: முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் நோக்கில் தான், ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. புதிய கவர்னர் மூலம் ஜனநாயகப் படுகொலை நடத்த, பிரதமர் மோடி அரசு முயன்றால் மக்களை திரட்டுவோம்.


'டவுட்' தனபாலு: திருவிழாவுக்கு இன்னும் பந்தல் காலே நடவில்லை. திருவிழா தேதி மட்டும் தான் குறிக்கப்பட்டுள்ளது. அதற்குள் உங்களுக்கு உதறல் எடுத்து விட்டதே... கடினமான கவர்னரை நியமித்தால், தமிழகத்தில் உங்களால் அரசியல் செய்ய முடியாது என நினைக்கிறீர்களோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்து விடப் போகிறது!


காங்., தலைவர் ராகுல்:
நான், 'காஷ்மீர் பண்டிட்' எனப்படும் காஷ்மீரத்து பிராமணர். என் சொந்த வீட்டுக்கு வருவது போன்ற எண்ணத்தை ஜம்மு பயணம் எனக்கு ஊட்டுகிறது. இந்த மாநிலத்திலிருந்து பறிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்கி, ஜம்மு - காஷ்மீரை 'மாநிலம்' என அழைக்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: எட்டாண்டுகளுக்கு முன் நீங்கள் பார்த்த காஷ்மீருக்கும், இப்போதைய காஷ்மீருக்கும் நிறைய வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்களே... பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கிய அப்போதைய காஷ்மீர் இப்போது சுற்றுலா பயணியரால் நிறைந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம், மத்திய பா.ஜ., அரசு தான். மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கி, வெடிகுண்டுகளும், துப்பாக்கி சத்தமும் கேட்க வேண்டும் என விரும்புகிறீர்களோ என்ற, 'டவுட்' உங்கள் பேச்சால் எழுகிறது!தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா:
ஜம்முவுக்கு அருகிலுள்ள புனித மலைக்குகை கோவிலில் வைஷ்ணவ தேவியை தரிசிக்க, மற்ற அரசியல் தலைவர்களைப்போல, ராகுல் ஹெலிகாப்டரில் செல்லவில்லை; குதிரை மீது சவாரி செய்யவில்லை.


'டவுட்' தனபாலு: ராகுலுக்கு இப்போது, 51 வயது தான் ஆகிறது. அவர் முழு மூச்சாக எதிர்க்கும் பிரதமர் மோடிக்கு, 70 வயதாகி விட்டது. அவரால் மலையில் நடந்து செல்ல முடியாது. நீங்கள் குறிப்பிடும் நபர் மீது நாட்டு மக்களுக்கு குடும்ப நேசம் தான் உள்ளது; ஓட்டு போட மாட்டார்கள். இதனால் தான் அவர், காங்., தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். அதை அறிந்தும், அவர் நடந்து சென்று சாமி கும்பிட்டதை பெரிதாக பேசுகிறீர்களோ என்பதே, 'டவுட்!'


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னி அரசு:
தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரவி மட்டுமல்ல; அமித் ஷாவையே கவர்னராக போட்டாலும், தமிழகத்தின் பண்பையோ, தமிழர் அடையாளத்தையோ யாரும் சேதாரப்படுத்த முடியாது. தேசிய இனத்தின் விடுதலை முழக்கம் உரத்து தான் கேட்கும்; இந்தியத்தை மறுத்து தான் நிற்கும்.


'டவுட்' தனபாலு: சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ள கட்சியின் முக்கிய பிரதிநிதி இப்படி பேசலாமா... இந்தியத்தை மறுத்து, தமிழகத்தால் செயல்படவே முடியாது. இந்த உண்மை தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இருந்தும் நீங்கள் வித்தியாசமாக பேசுவது, 'நாங்கள் வித்தியாசமான கட்சி' என கட்சியின் அப்பாவிகளுக்கு காட்டுவதற்காகத் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!


காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்:
மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கே மூடுவிழா வரும். பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்றனர்.'டவுட்' தனபாலு: நீங்கள் மத்திய நிதியமைச்சராக இருந்த போதும், மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போதும் தான், ஏராளமான லாபகரமான பொதுத்துறை நிறுவனங்கள் விற்று காசாக்கப்பட்டன. அந்த உண்மையை மக்கள் நன்கு அறிவர். செய்த தவறை மறைக்க இப்போது, பா.ஜ., அரசு மீது பழி போடுகிறீர்களோ என்ற, 'டவுட்' இப்போது வருகிறது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Suppan - Mumbai,இந்தியா

    " பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கிய அப்போதைய காஷ்மீர் இப்போது சுற்றுலா பயணியரால் நிறைந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம், மத்திய பா.ஜ., அரசு தான். " சரியான செய்தி. சில நாட்கள் முன்புதான் காஷ்மீர் சென்று வந்தேன். பாதுகாப்பு கட்டமைப்பு மிக நன்று. அமைதி நிலவுகிறது. தங்கள் வயிற்றுப் பிழைப்பைக் கெடுப்பதால் திவீரவாதிகளை மக்கள் வெறுக்கிறார்கள். ஆனந்த் நாக், பாராமுல்லா போன்ற சில இடங்ககளில் சில சமயங்களில் திவீரவாதிகள் தோன்றுகிறார்கள். அவர்களைக் கண்டவுடன் " அனுப்பிவிடுகிறார்கள். கல்லெறி சம்பவங்கள் அறவே இல்லை. அப்துல்லா, மெஹபூபா போன்றவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாவிடில் அரசியல் அநாதைகளாகி விடுவார்கள் என்றே மக்கள் கருதுகிறார்கள். உட்புறக் கட்டமைப்புகள் மேம்படுத்தப் படுகின்றன. எந்த ஒரு பயமுமில்லாமல் நாங்கள் சென்று வந்தோம்..

  • rasaa - atlanta,யூ.எஸ்.ஏ

    Ragul (khan) gandhi is not a kashmir pandit. Basically he is a Muslim. Indira piriyadarshini married a Muslim Feroz khan Gandhi. For their self convenience submerged khan and raised Gandhiname.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement