dinamalar telegram
Advertisement

ரூ.6 கோடியை 'அசால்டாக' அள்ளிய அதிகாரி!

Share

ரூ.6 கோடியை 'அசால்டாக' அள்ளிய அதிகாரி!
நாயர் கடையில் ஆஜரான பெரியவர்கள், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அண்ணாச்சி தந்த கொழுக்கட்டையை ருசித்தபடியே, ''ஆளுங்கட்சி ஒன்றியச் செயலரை மாத்தினா தான், உள்ளாட்சி தேர்தல்ல கரையேற முடியும்னு, தலைமைக்கு புகாரே போயிடுத்து ஓய்...'' என தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலரா இருக்கறவர் ஸ்ரீதரன்... கட்சிக்காராளை மதிக்காம, சர்வாதிகாரமா செயல்படறாராம் ஓய்... இவரது ஒன்றியத்துல, பல கிராமங்கள்ல கட்சிக்கு கிளைகளே இல்லை ஓய்...

''ஒன்றியச் செயலர் சமுதாய பாசத்துல அரசியல் பண்றதால, கட்சிக்காரா ரெண்டு கோஷ்டியா செயல்படறா... 'உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல்ல, சுறுசுறுப்பா செயல்படக் கூடிய ஆளா பார்த்து, ஒன்றியச் செயலரா போட்டா தான் சரிப்படும்'னு பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கையெழுத்து போட்டு, அறிவாலயத்துக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''தவிச்ச வாய்க்கு தண்ணியில்லைங்க...'' என, இரண்டாவது தகவலை பேச ஆரம்பித்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், இடைப்பாடி அரசு 'பஸ் டிப்போ' வுல 110க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடுது... டிரைவர், கண்டக்டர், டெக்னீஷியன்கள்னு, 350க்கும் மேற்பட்டவங்க பணியில இருக்காங்க...

''நகராட்சி எல்லைக்குள்ள இருக்கிற இந்த டிப்போவுல குடிக்க தண்ணியே இல்லை... ஆழ்துளை கிணற்றுல இருந்து எடுக்குற தண்ணியைத் தான் எல்லாரும் குடிக்கிறாங்க... அந்த தண்ணியும் உப்பா தான் இருக்கு... இதனால, சிலர் வீட்டுல இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்துட்டு வந்துடுறாங்க...

''ஆனாலும், டிரைவர், கண்டக்டர்கள் பாடுதான் திண்டாட்டமா இருக்குதுங்க... அதிகாரிகளிடம் பல முறை புகார் தந்தும், யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ஒருவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தொகுதிங்கிறதால, புறக்கணிக்காவளா...'' என சிரித்த அண்ணாச்சியே, ''ஆட்சி மாறியும், அசால்டா வாங்கி குவிச்சிட்டு இருக்காங்க வே...'' என கடைசி தகவலுக்கு வந்தார்.

''எந்த துறையில, யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''கோவையில, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறைகள் சார்புல, பிரதான ரோடுகள்ல பாலங்கள் கட்டிட்டு இருக்காவ... இதுல, நெடுஞ்சாலை துறை திட்ட பிரிவு, பெண் அதிகாரிகள் கட்டுப்பாட்டுல தான் இருக்கு வே...

''போன அ.தி.மு.க., ஆட்சியில நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தான், இன்னைக்கு வரைக்கும் பணியில இருக்காவ...

''டெண்டர்களை 'ஓகே' பண்ண, ஒரு பெண் அதிகாரி, வீட்டுல இருந்தபடியே பேரம் பேசி, கான்ட்ராக்டர்களிடம் கோடிக்கணக்குல கல்லா கட்டுதாங்க... சமீபத்துல ஒரு பணிக்கு மட்டும் 'லம்ப்'பா 6 கோடி ரூபாயை ஒரு அதிகாரி அள்ளிட்டாங்கல்லா...'' என, முடித்தார் அண்ணாச்சி.

''என் சிஸ்டர் சாருமதி ஆத்துல விநாயகர் பூஜைக்கு கூப்பிட்டிருக்கா... கிளம்பறேன் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (4)

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  இப்பதான் ஆண் பெண் எல்லோரும் சமம் ஆச்சே. ஆறு கோடி என்ன 60 கோடியை கூட தில்லா வாங்குவார்கள். மாட்டினா உடனே பெயில் தர கோர்ட் இருக்கு. சம்பதித்த பணத்திலேயே கேஸ் ஆடி தப்பிக்க.."யாமிருக்க பயமேன்" வழி சொல்ல.. வக்கீல் இருக்கான்..

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  புரிய வேண்டியவர்களுக்கு புரியனும், முக்கியமா நடவடிக்கை என்று உடனே எடுக்கணும், இல்லையெனில் இந்த கரையான்கள் ஆட்சிக்கு பெரும் கேட்ட பெயர்தான். கஷ்டப்பட்டு எடுத்த நல்ல பெயரை விடலாமா ?

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அந்தம்மா பிடிபட்டால்'நான் என்ன அத்தனையையுமா முழுங்க முடியும்? போக வேண்டியவர்களுக்கு போயாச்சு, யாரும் என்னை டச் பண்ண முடியாது' என்பார் மேலிடத்துக்கு பங்கு போய்விட்டாள் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளலாம் மதுரை பாலம் மாதிரி இடிந்து விழுந்தால் சாகத்தான் கூலிக்காக உழைப்பவர்கள் இருக்கிறார்களே நடத்துங்கம்மா ஜாலியா

 • A R J U N - sennai ,இந்தியா

  சாருமதி ககு இனி சறுக்கு முகம் தான் இன்னிக்கி தெரிஞ்சிடும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement