dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன்: தமிழகத்தில் 87 சதவீதம் ஹிந்துக்கள் வாழ்கின்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் உள்ளார். நாங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதனால், இந்த முறையாவது விநாயகர் சதுர்த்திக்கும், வரக்கூடிய ஹிந்து பண்டிகைகளுக்கும், முதல்வர் வாழ்த்து தெரிவிப்பாரா என்ற ஏக்கத்தோடு அவருக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறோம்.


'டவுட்' தனபாலு: அவருக்குத் தான் ஹிந்துக்கள், ஹிந்து பண்டிகைகள் பிடிக்காதே... பிறகு ஏன், அவரின் வாழ்த்தை, பா.ஜ., எதிர்பார்க்கிறது? அவர் வாழ்த்து சொல்லாவிட்டால், பண்டிகை கொண்டாடியது போல இருக்காதா... இப்படி கேட்பதெல்லாம் ஒரு அரசியல் பரபரப்பு செயலுக்குத் தானோ என்ற, 'டவுட்' பா.ஜ.,வினருக்கே வந்திருக்கும்!


தமிழக காங்., தலைவர் அழகிரி:
தமிழக சட்டசபையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது.


'டவுட்' தனபாலு: முதல் ஆளாக வாழ்த்து தெரிவிக்க முயன்றுள்ளீர். எனினும், உங்களையும் முந்தி, பல கூட்டணி கட்சித் தலைவர்கள், முதல்வரை வானளாவ புகழ்ந்து தள்ளிவிட்டனர். எனினும், மாநில காங்கிரஸ் தலைவரான உங்களின் பாராட்டு, முதல்வருக்கு முக்கியமானதே என்பதில், யாருக்கும், 'டவுட்'டே வராது!


பத்திரிகை செய்தி
: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில், 2017ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்தனர். அதன்படி, சசிகலாவிற்கு சொந்தமான, செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரில் உள்ள 100 கோடி ரூபாய் பங்களாவை, வருமான வரித் துறை முடக்கி உள்ளது. பங்களா வாசலில், 10 பக்கங்கள் உடைய 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.


'டவுட்' தனபாலு: இதற்கு முன் பல முறை, இந்த குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எனினும், அந்த குடும்பத்தினரை யாராலும் அசைக்க முடியவில்லை. எனவே, இப்போது செய்யப்பட்டுள்ள முடக்கமும், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதில், 'டவுட்'டே இல்லை. அந்த அளவுக்கு அவர்கள், 'உயர்ந்து' உள்ளனர்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அந்த எண்பத்தேழு சதவீத ஹிந்துக்களின் பெரும்பாலோரின் வாக்குகளால்தான் இவர் வந்தார். மைனாரிட்டியான பத்து சத்தத்தை தூக்கி அவர்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துவர் இவர் கட்சியிலுள்ள இந்துக்கள் யாரும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடமாட்டார்களா? அதற்குமுன் இவர் வீட்டில் அம்மகியார் விமர்சகயாகக் கொண்டாடுவதைத் தடுக்க முன்வருவாரா ?

  • திருட்டு திராவிடன் -

    ஏம்பா கடைந்தேடுத்த முட்டாள்களிடம் வாழ்த்தை எதிர் பார்க்கிறீர்களே. இது உங்களுக்கு நல்லதல்ல.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement