dinamalar telegram
Advertisement

ஆளுங்கட்சியினர் 'அட்ராசிட்டி' அறிவாரா ஸ்டாலின்?

Share

ஆளுங்கட்சியினர் 'அட்ராசிட்டி' அறிவாரா ஸ்டாலின்?
''திருடாதே... பாப்பா திருடாதே...'' என்ற பாடலை முணுமுணுத்தபடியே, பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''பாடலுக்கான மேட்டரையும் நீங்களே சொல்லிடுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துல இருக்கிற ஒரு டாஸ்மாக் கடையில, 16 - 17 வயசுள்ள மூணு சிறுவர்கள் பூட்டை உடைச்சு, 15 பீர் பாட்டில்கள், 13 ஆயிரம் ரூபாயை திருடிட்டு போயிட்டானுவ...

''கடையில இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து, கும்பகோணம் மேற்கு போலீசார், மூணு பசங்களையும் பிடிச்சுட்டாவ வே... முறைப்படி அவங்க மேல வழக்கு போட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குல்லா அனுப்பணும்...

''அதை விட்டுட்டு, மூணு பசங்களிடமும் பணத்தை வாங்கிட்டு, 'போங்கடா தம்பி'ன்னு அனுப்பிட்டாவ... இதனால, கொதிப்புல இருக்கிற டாஸ்மாக் ஊழியர்கள், போலீசை கண்டிச்சு போராட்டம் நடத்த, 'பிளான்' பண்ணிட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''இந்த மாதிரி போலீசுக்கு பணம் குடுத்து தப்பிக்கற பசங்க, நாளைக்கு பெரிய கிரிமினல் ஆகிடுவாங்களே...'' என கவலைப்பட்ட அந்தோணிசாமியே, ''போலீசாரின் பிரச்னையையும் கொஞ்சம் கேளுங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...

''சென்னையில, சட்டசபை கூட்டம் நடக்குற கலைவாணர் அரங்கம் முன்னாடி, சமீபத்துல பாதுகாப்பு பணியில இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் வேலுசாமி துப்பாக்கியால சுட்டு தற்கொலை முயற்சியில ஈடுபட்டாரே... அவருக்கு, 24 வயசுதான் ஆகுதுங்க...

''அதே மாதிரி, சென்னை ஆயுதப்படையில பெண் போலீஸ் ஒருத்தர், கையை அறுத்து தற்கொலை முயற்சியில இறங்கினாங்க... போலீஸ்ல சேர்ந்து சேவை செய்யணும்கற எண்ணத்தோட வர்ற இளரத்தங்களை, உயர் அதிகாரிகளின் டார்ச்சர், பாலியல் தொல்லைகள், காதல் பிரச்னைகள்னு சொல்லி, விபரீத முடிவுகளை எடுக்க வைக்குதுங்க...

''இந்த மாதிரி தற்கொலை முயற்சிகளை தடுக்க, டி.ஜி.பி., சைலேந்திர பாபு நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்குமுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''கங்கணம் கட்டி கல்லா கட்டறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.''ஆளுங்கட்சி தகவலா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ஆமாம்... கோவை மாவட்டம், பொள்ளாச்சி பிரசவ ஆஸ்பத்திரியில இருந்த சைக்கிள் ஸ்டாண்டை அகற்றி, மருத்துவமனையை விரிவுபடுத்தணும்னு எதிர்க்கட்சியா இருந்தப்ப, தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினா ஓய்...

''இப்ப, அந்த சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகையை தி.மு.க.,காராளே கைப்பத்திட்டா... அதே மாதிரி, நகராட்சி பகுதிகள்ல இருக்கற கட்டண கழிப்பறைகளையும் அவாளே ஆக்கிரமிச்சுட்டா ஓய்...

''பஸ் ஸ்டாண்ட் கடைகளின் குத்தகை தொகையை குறைச்சு, ஏலம் எடுக்கற முயற்சிகள்ல இறங்கியிருக்கா... போன ஆட்சியில, அ.தி.மு.க.,வினருக்கு எது எதுல வருமானம் வந்ததுன்னு கணக்கு எடுத்து, அதுல இருந்து ஒரு பைசா கூட குறையப்டாதுன்னு சபதம் போட்டு, தி.மு.க.,காரா தீயா வேலை பார்க்கறா ஓய்...

''அரசு நிர்வாகத்துல கட்சியினர் தலையீடு கூடாதுன்னு முதல்வர் அறிவுறுத்தி இருக்கார்... பொள்ளாச்சி தி.மு.க.,காரா பண்ற, 'அட்ராசிட்டி' எல்லாம் அவர் பார்வைக்கு போறதான்னு தெரியலை ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''இதுவரைக்கும் போகாம இருந்தாலும், இப்ப போயிரும் பா...'' என்றபடியே அன்வர்பாய் கிளம்ப, பெரியவர்கள் பின்தொடர்ந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (4)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இந்த 'அற்றாசிட்டி' எதுவும் தெரியாமல் 'சிட்டி ' யில் உட்கார்ந்திருப்பாரா ? தேர்தலுக்கு முன்பே உ. பிக்களுக்கு இதெல்லாம் நடத்த அவிழ்த்து விடுவார் என அவர்களும் எதிர்பார்த்தார்கள், ஐவரும் செய்து கொடுக்கிறார் இதில் எதுவும் தெரியாமல் இல்லை அறிக்கையெல்லாம் சும்மா பொதுமக்களை ஏமாற்றத்தான்

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  அரசு நிர்வாகத்துல கட்சியினர் தலையீடு கூடாதுன்னு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தாலும் கட்சிக்காரன் சைடு Incim பார்க்கத்தான் கட்சியில் இருக்கான். தலைவர் அடிக்கறமாதிரி அடிப்பார் கண்டுக்க மாட்டார். நீ பாட்டுக்கு பூந்து விளையாடு...

 • A R J U N - sennai ,இந்தியா

  ஆளும் கட்சி என்றாலே ஆட்டைய போடுற கட்சியாதான் இருக்கு.. முன்பு அவுக இப்போ இவுக அம்புடுதேன்

 • duruvasar - indraprastham,இந்தியா

  வயதானதால் பெருசுகளுக்கு விடியல் இனிப்பை ஜீரணிக்க கஷ்டபடராங்களோன்னு நினைக்க தோணுது.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement