dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

முதல்வர் ஸ்டாலின்: கேரளாவில் ஓணம், பக்ரீத் பண்டிகைகளுக்கு பிறகு கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராததால், மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.


'டவுட்' தனபாலு: ஹிந்துக்களைப் பற்றியும், ஹிந்து மத பண்டிகைகள் குறித்தும் நீங்களும், தி.மு.க.,வினரும் இதற்கு முன் கடுமையாக வசை பாடியதால் தான், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான தடை விதிக்கப்பட்ட போது, ஹிந்துக்களுக்கு பல விதமான, 'டவுட்' ஏற்பட்டது. இப்போது நீங்கள் கூறிய விளக்கத்தால், யாரும் தவறாக புரிந்து கொள்ள மாட்டார்கள்.


பிரதமர் மோடி: அனைத்து ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதாவது, ஒவ்வொரு வீரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுடன் ஒரு மணி நேரம் செலவிட்டு, விளையாட்டுக்கு அவர்களை ஊக்கப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளேன்.


'டவுட்' தனபாலு: நல்ல முயற்சி தான். ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி குவித்த வீரர், வீராங்கனைகள் மட்டுமின்றி, பங்கேற்றவர்களும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசினால் மாணவர்களுக்கு உத்வேகம் கிடைக்கும். அதனால் அடுத்த போட்டிகளில் கூடுதல் பதக்கங்கள் கிடைக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


பத்திரிகை செய்தி:
தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனம், 5,402 சில்லரை கடைகள் வாயிலாக மது வகைகளை விற்பனை செய்கிறது. மது வகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை, மதிப்பு கூட்டு வரி வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் மது விற்பனை வாயிலாக, தமிழக அரசுக்கு, 33 ஆயிரத்து, 811 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.'டவுட்' தனபாலு: இவ்வளவு கணிசமான வருவாய் வரும் துறையை எந்த அரசாவது மூடுமா... மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு கிடைத்துள்ள வருவாயை பார்க்கையில், மது குடிப்போர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து விட்டதோ என்ற, 'டவுட்'டும் ஏற்படுகிறது. வருவாயை மட்டும் பார்க்காமல், இளைஞர் நலனையும் தமிழக அரசு கருத வேண்டுமே என்பது தான் நடுநிலையாளர்களின் கவலையாக உள்ளது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (4)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  ஆடித்தள்ளுபடி என்று ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார் நகை , தூக்கிக்கடைகளிலும், தெருக்களிலும் நெறுக்கியடித்த கூட்டத்தை கூட வியாபாரிகளின் பொருளாதார சரிவை எண்ணி அனுமதிக்கலாம், விநாயகர் என்ன கமிஷனா தருவார்? இப்போதுதான் கொரானா, கூட்டம், தொற்று எல்லா நினைப்பும் வருகிறது

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  தடையை மீறி கிராமசபை கூட்டம்கிற பேர்ல இவரு செட்டப் கும்பல் கூட்டியப்போ கொரோனா பரவல் தெரியாதாமா?

 • duruvasar - indraprastham,இந்தியா

  அரசு ஊக்கத்தொகை கொடுத்து மேலும் பல சிறுகுறு தமிழ் வியாபாரிகள் மது ஆலைகளை தொடங்க வழிசெய்தால் சர்வதேச பிராண்ட்களுக்கு நிகரான மதுபானங்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். தமிழகம் இந்தியாவிலேயே முதல் மதுமிகு மாநிலமாகவும் திகழும்.

 • சமநிலை மூர்த்தி -

  டாஸ்மாக் குறித்து தினமலர் கூறிய கருத்து முற்றிலும் உண்மை. எனினும் இளைஞர்களின் சீரழிவையும் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement