dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

தமிழக நீர் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன்: தமிழினம் வலிமையோடு இருக்க, ஈ.வெ.ரா., போட்ட அடித்தளமே காரணம். அவர் மதத்தை, கடவுளை, ஜாதியை எதிர்த்தார்; இந்த இயக்கத்தை, இனத்தை காப்பாற்றி உள்ளார். சாமி கும்பிடுகிறீர்களோ, இல்லையோ, எனக்கு கவலை இல்லை; இனத்தை காக்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: ஒருவர் உயிருடன் இருக்கும் போது வாழ்த்தாமல், இறந்த பின் வானளாவ புகழ்வது, பொதுவான வழக்கமாக போய் விட்டதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. இப்போது அவரை வாழ்த்தும் அல்லது வாழ்த்திய திராவிடத் தலைவர்கள் பலர், அவர் உயிருடன் இருந்த போது, கடும் சொற்களால் ஏசினர் என்பதை வரலாறு மறக்காது.


முதல்வர் ஸ்டாலின்:
சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படை கொள்கையாக, ஈ.வெ.ரா., உருவாக்கினார். அது தான் கடந்த நுாற்றாண்டில் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது; எதிர்காலத்துக்கு பாதை அமைத்து தரப் போகிறது.


'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்லும் பெரியவர் உயிருடன் இருந்த காலத்தில், 50 - 60 ஆண்டுகளாக இந்த கொள்கைகளுக்காகத் தான் போராடினார். அவர் இறந்து, 47 ஆண்டுகள் ஆகி விட்டன. அவர் புகழைத் தான், தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் பேசுகின்றன. இருந்தும், சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூக நீதி, இன உரிமை இன்னும் வாய்க்கவில்லையோ, ஏன் என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்துள்ளது!


ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு:
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட திருவிழாக்களுக்கு, கொரோனா தொற்று காரணமாக அனுமதி அளிக்கப்படவில்லை. இது, மாநில அரசின் தன்னிச்சையான முடிவல்ல. மத்திய உள்துறை செயலர் அஜித் பில்லா, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய படியே பிறப்பிக்கப்பட்டுள்ளது.


'டவுட்' தனபாலு: தடை விதிப்பதற்கு மட்டும், மத்திய அரசின் உத்தரவை சுட்டிக்காட்டும் தமிழக அரசு, ஒன்றிய அரசு விவகாரம், 'நீட்' தேர்வு, ஒரே நாடு போன்ற விவகாரங்களில் பின்பற்றுவதில்லையே... அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தியை பொது இடத்தில் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்கள், மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றவில்லையோ... 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (4)

 • Balasubramanyan - Chennai,இந்தியா

  அப்போ ஏன் முஸ்லீம் மேட்ரிமோனி , நாயுடு மேட்ரிமோனி , கிறிஸ்டின் மேட்ரிமோனி .நாடார் மேட்ரிமோனி .Periyar சமத்துவபுரத்தில் யார் இர்ருகுரங்கோ .

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அண்ணா, பெரியார் இவர்களுக்கும், எம் ஜி ஆர், அம்மா அவர்களுக்கும் அவ்வப்பொழுது விளையாட்டில் தாய்ச்சியாக தொட்டுக்கொள்ளும் பெயர்கள்தான்

 • sathish - melbourne,ஆஸ்திரேலியா

  துறை முருகனுக்கு காக்காவின் மேல் உள்ள உலகில் யாராக்குவது இருக்கா ??

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  80 40 ஐ மணப்பதும் ஹிந்து மதத்தை கேவலப்படுத்துவதும் தான் சமூக நீதியா இதற்காக தான் மணிமண்டபமா

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement