dinamalar telegram
Advertisement

'மாஜி' பேஸ்புக் பக்கத்தில் 'உய்யலாலா!' பார் கலெக்ஷன் அள்ளும் உடன்பிறப்புகள்

Share

வீட்டு மொட்டை மாடியில், 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தாள் சித்ரா.சூடாக பில்டர் காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, வ.உ.சி., பிறந்த நாளை இந்த வருஷம் தடபுடலா கொண்டாடியிருக்காங்களே,'' என ஆரம்பித்தாள்.
''மித்து, வ.உ.சி., பிறந்த நாளை அரசு விழாவா நடத்தணும்னு, தெற்கு தொகுதியில ஜெயிச்ச, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கோரிக்கை வச்சாரு. அதை ஏற்று, விழா நடத்தியிருக்காங்க. பூங்கா வளாகத்துக்குள் சிலை வைக்கப் போறாதாவும், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்காரு,''

''சட்டசபையில, வானதி ரொம்பவே 'ஆக்டிவ்'வா செயல்படுறாங்க. ஜெயிலை வேறிடத்துக்கு மாத்திட்டு, பூங்காவை விரிவுபடுத்தணும்னு பேசியிருக்காங்க. அதையும் கவனத்துல எடுத்து, முதல்வர் பதில் சொல்லியிருக்காரு. வ.உ.சி., பிறந்த நாளுடன், பாரதியார் நுாற்றாண்டு விழாவை இணைத்து நடத்தணும்னு கோரிக்கை வச்சிருக்காங்க. அதற்கான அறிவிப்பும் அரசு தரப்புல வரும்னு சொல்றாங்க,''

''ஓ... அப்படியா...'' என்ற மித்ரா, ''பா.ஜ.,விலும் கோஷ்டி பிரச்னை இருக்கு போலிருக்கே,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''ஆமாப்பா, அரசு விழாவுல மட்டும் எம்.எல்.ஏ., கலந்துக்கிட்டாரு. கட்சி சார்புல நடந்த நிகழ்ச்சியில கலந்துக்கலை. இதை சிலர் பூதாகரமாக்கி, அரசியல் ஆதாயம் தேட முயற்சி செஞ்சிருக்காங்க. அதுக்கு, 'சட்டசபையில கோரிக்கை விடுத்ததே நான்தான்; அதை ஏற்று விழா நடத்துனாங்க; அதுல கலந்துக்கிட்டேன்னு, எம்.எல்.ஏ., கூலா பதில் சொல்லிட்டாங்களாம்,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.


''அதெல்லாம் சரி, டாஸ்மாக் 'பார்' திறக்க இன்னும் அனுமதி கொடுக்கலை. ஆனா, வியாபாரம் சக்கைப்போடு போடுதே. போலீஸ்காரங்க கண்டுக்கவே மாட்டாங்களா...''

''என்னப்பா... இப்படி கேட்டுட்டே. மதுவிலக்கு போலீஸ், ஸ்டேஷன் போலீஸ், கலால் துறை ஆபீசர்ஸ், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு மாசந்தவறாம மாமுல் கொடுக்கறாங்களாம். அதனால, இல்லீகலா 'பார்' நடத்துனாலும் கண்டுக்காதீங்கன்னு சொல்லிட்டாங்களாம்,''

''சாய்பாபா காலனி லிமிட்டுல, வியாபாரம் எல்லை மீறி நடக்குதாம். ரோந்து போறவங்க விசாரிச்சா, மேலதிகாரிக்கு தெரியும்; உங்க வேலையை பார்த்துட்டு போங்கன்னு தைரியமா சொல்றாங்களாம்,''

''அக்கா, ஆளுங்கட்சி புள்ளிக்கு, மதுக்கடை 'பார்'ல இருந்து, மாசம் தவறாம பல லட்சம் ரூபா மாமூல் போறதா சொல்றாங்க,''

''உண்மைதான், மித்து! சட்டசபை தேர்தல்ல, தன்னுடைய வார்டுல, மூணாவது இடம் பிடிச்சவரு, ஆளுங்கட்சியில முக்கிய பொறுப்புல இருக்காரு. அவரு, ரெண்டு தொகுதியில இருக்குற ஒவ்வொரு மதுக்கடை பார்-லயும் கலெக்சனை அள்ளுறாராம்,''

''ஆளுங்கட்சி நிர்வாகிகளும் ரொம்பவே 'அப்செட்'டுல இருக்கறதா கேள்விப்பட்டேனே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.


''அதுவா, சின்ன தடாகம் வட்டாரத்துல செயல்படுற செங்கல் சூளைக்கு தி.மு.க.,வுல முக்கிய நிர்வாகிங்க ரெண்டு பேரு ஆதரவா இருக்காங்களாம்.இதுக்கிடையில, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ், சூளை விவகாரங்களை சட்டசபையில பேசியிருக்காரு. அவரை, சூளைக்காரங்க சந்திச்சு, பொன்னாடை போர்த்தியிருக்காங்க,''


''இதை கேள்விப்பட்ட தி.மு.க., நிர்வாகிகள், 'மூடு-அவுட்' ஆகிட்டாங்களாம். நம்மளை மீறி, அவுங்க என்ன செய்றாங்கன்னு பார்ப்போம்னு பொருமிட்டாங்களாம்,'' என்ற சித்ரா, ஸ்மார்ட் போனில், 'பேஸ்புக்' பக்கத்தை பார்க்க ஆரம்பித்தாள்.அதை கவனித்த மித்ரா,

''அக்கா, 'மாஜி' அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டீம் பெயரில், அவரது ஆதரவாளர்கள், 'பேஸ்புக்' பக்கம் வச்சிருக்காங்க. தினமும் தகவல்களை 'அப்டேட்' செஞ்சிட்டே இருப்பாங்களாம்; 1.70 லட்சம் 'பாலோயர்ஸ்' இருக்காங்களாம். இந்த பக்கத்தை ஒரு குரூப், 'ஹேக்' செஞ்சு, ஆபாச படங்களை பதிவேற்றம் செஞ்சிடுச்சாம்,''

''அச்சச்சோ... அப்புறம்,''

''பதறிப்போன மாஜி டீம், சைபர் கிரைம் போலீசுக்கும், 'பேஸ்புக்' நிறுவனத்துக்கும் 'கம்ப்ளைன்ட்' சொல்லியிருக்காங்க . 96 மணி நேரத்துல, பக்கத்தை மீட்டெடுத்திருக்காங்க. அதுக்குள்ள, 7,000 'பாலோயர்ஸ்' வெளியேறிட்டாங்களாம். என்ன நடந்துச்சுன்னு, கட்சி நிர்வாகி ஒருத்தரு விளக்கம் சொல்லி, வீடியோ வெளியிட்டிருக்காங்க. வேலுமணி இமேஜை 'டேமேஜ்' செய்றதுக்கு, எதிர்க்கட்சிக்காரங்க இப்படியெல்லாம் செய்றாங்கன்னு, ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பிட்டு இருக்காங்களாம்,''

''அதிருக்கட்டும். 'சைபர் கிரைம்' போலீஸ்காரங்களும் பீதியில இருக்காங்களாமே,''''கரன்சி வாங்கிட்டு, பலரது மொபைல்போன் அழைப்புகளை, தொலைதொடர்பு நிறுவனங்கள்ட்ட இருந்து, சட்ட விரோதமா சேகரிச்சு கொடுத்திருக்காங்களாம். கடத்தல் வழக்கில் ஒரு போலீஸ்காரர் கைதானதும், இந்த விவகாரம் பெருசாகியிருக்கு,''

''எந்த அடிப்படையில், எந்த வழக்கு எண் பயன்படுத்தி, தகவல் திரட்டுனாங்கனு விசாரிக்கிறாங்களாம். சிலர் சிக்குவாங்கன்னு போலீஸ் வட்டாரத்துல பேசிக்கிறாங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும். லஞ்சம் வாங்குன அதிகாரியை, மேலிட அழுத்தம் காரணமாக, விட்டுட்டாங்கன்னு போன வாரம் சொன்னீயே, அப்படியெல்லாம் நடக்கவே இல்லேன்னு, விஜிலென்ஸ் அதிகாரிங்க சொல்றாங்களாம்,

''மாஸ்க், கையுறை அணிந்து கொண்டு, 'சானிடைசர்' பாட்டிலை, ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்திய மித்ரா, பின்இருக்கையில் அமர்ந்தாள்.ரேஸ்கோர்ஸில் இருந்து சுங்கம் பகுதியை கடந்தபோது, அரசு பஸ் பணிமனையை பார்த்ததும்,

''அரசு போக்குவரத்து கழகத்துல 'டிரான்ஸ்பர்' வாங்கிக் கொடுக்குறதுக்கு சில ஊழியர்களே, புரோக்கரா' செயல்படுறாங்களாமே,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, உயரதிகாரிகளுக்கு சில ஊழியர்கள் நெருக்கமாக இருக்காங்களாம். அவுங்களை கவனிச்சா போதுமாம். நினைச்ச இடத்துக்கு 'போஸ்டிங்' கெடைக்குமாம்.''இதே மாதிரி, அரசு பஸ்களை 'ஓவர் டேக்' எடுத்து மீறும் தனியார் பஸ்களை, ரோட்டுல தடுத்து நிறுத்தி, 'டைமிங்' கேட்கும் போக்குவரத்து கழக அலுவலர்களை, உயரதிகாரிகளிடம் தனியார் பஸ்காரங்க சொல்லி, வேறிடத்துக்கு மாத்திடுறாங்களாளாம்,''

''இதுக்காக, உயரதிகாரிகளை தனியார் பஸ்காரங்க 'வெயிட்'டா கவனிக்கிறாங்களாம். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுறதை தடுக்குற அலுவலர்களை, கரன்சி வாங்கிட்டு, துாக்கி அடிக்கறதா, அலுவலர்கள் புலம்புறாங்க,'' என்றபடி, லங்கா கார்னர் பாலத்தை கடந்தாள் சித்ரா.

எதிர் திசையில், கல்வித்துறை ஜீப் கடந்து சென்றதை பார்த்த மித்ரா, ''அக்கா, நம்மூர்ல ஏற்கனவே சி.இ.ஓ.,வா இருந்த ஒருத்தரு, மறுபடியும் திரும்பி வர்றதுக்கு பல ரூட்டுல முயற்சி பண்றாராம். ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் இருக்கறதுனால, புதுசா சி.இ.ஓ.,வா யாரு வந்தாலும், அவுங்க மேல ஏதாச்சும் குற்றச்சாட்டுகளை அடுக்கி, வேறிடத்துக்கு மாத்துறதுக்கு ஏற்பாடு செய்றாராம்,'' என்றாள்.டவுன்ஹால் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • Kannan - ,

    No time to read storey.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement