dinamalar telegram
Advertisement

நாங்கள் இருக்கிறோம்

Share

கொரோனா காரணமாக சம்பாதிக்கும் தலைமையை இழந்த குடும்பங்களை தாங்கிப் பிடிக்கும் புனிதப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது சாரதா அறக்கட்டளைசென்னையைச் சார்ந்த சாரதா அறக்கட்டளையின் நிறுவனராக உஷா ஸ்ரீதர் இருக்கிறார் தங்களுக்கு புகழோ விளம்பரமோ தேவைப்படாத பல நல்ல உள்ளங்களைக் கொண்டவர்கள் இவரோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்
இவர்கள் அனைவரும் தங்களது வருமானத்தில் ஒரு பங்கை அறக்கட்டளைக்கு வழங்கி அதன் மூலம் சிறிதும் பெரிதுமாக தங்களால் முடிந்த நற்பணிகளை செய்து வருகின்றனர்.கொரோனா காரணமாக பல குடும்பங்கள் சம்பாதிக்கும் தலைமையை இழந்து தவிப்பதை பார்த்து வருந்தினர்.
மாதம் முப்பதாயிரம் நாற்பாதாயிரம் என்று சம்பாதித்துக் கொண்டிருந்த குடும்பத் தலைவர் திடீரென கொரோனா காரணமாக இறந்ததும் அடுத்து என்ன செய்வது எனத்தெரியாமல் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் திண்டாடிப் போகின்றன
வீட்டு வாடகை, மளிகை பாக்கி ,குடும்பம் நடத்த உணவுப் பொருள், பிள்ளைகளின் படிப்பு என்று பல அத்யாவசிய தேவைகள் தலைக்கு மேல் கத்தியாக தொங்கி பயமுறுத்துகிறது.
இந்த குடும்பங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர் அதன் அடிப்படையில் சம்பாதிக்கும் குடும்பத்தலைவரை இழந்த குடும்பம், அரசு உதவி, தனியார் உதவி, உறவினர் நண்பர் உதவி உள்ளிட்ட ஏதாவது உதவி பெற்று அந்த குடும்பம் சமாளித்துக் கொள்ளுமா? என்று பல கட்ட ஆய்வு செய்கின்றனர்.
அப்படி சமாளிக்க முடியாத குடும்பத்தினர் இவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக மாதாந்திர மளிகை பொருட்களை கொடுக்கின்றனர் பின்னர் அந்த குடும்பத்தில் உள்ள மணைவி மகள் மகன் போன்றவர்களின் தகுதி அறிந்து அவர்களுக்கான வேலை அல்லது தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
இந்த திட்டத்தின் அடிப்படையில் இப்போது சில குடும்பத்தினர் அழகு கலை நிலையத்திலும், நட்சத்திர ஒட்டலில் செப்பாகவும் (சமையல் கலைஞர்),பேக்கரி நிறுவனங்களிலும் பயிற்சி பெற்று வருகின்றனர், இதில் தேர்ந்துவிட்டால் இவர்களுக்கு சம்பந்தப்பட்ட தொழில் துவக்கித்தர உள்ளனர்.
இதெல்லாம் தெரியாது நாங்க கிராமத்து ஆளுங்க என்று சொல்லக்கூடியவர்களுக்கு தையல் மெஷின்,மாவு அரைக்கும் கிரைண்டர் மிஷின் உள்ளீட்ட சாதனங்களை வழங்கிவருகின்றனர்.
தங்களிடம் உள்ள நிதி அடிப்படையில் நுாறு குடும்பத்தை கரை சேர்க்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் தகுதியான குடும்பத்தினரை கண்டறிவதில் அறக்கட்டளையினர் கள ஆய்வில் உள்ளனர்.இந்த கட்டுரை படிக்கும் உங்களை கேட்டுக் கொள்வது எல்லாம் உங்களுக்கு தெரிந்த, தலைமையை இழந்து தவிக்கும் சென்னை எல்லைக்குள் வசிக்கும் குடும்பம் இருந்தால் அவர்களுக்கு சாரதா அறக்கட்டளை எண் கொடுத்து உதவுங்கள்,நன்றி!எண்:86674 68294.
-எல்.முருகராஜ்

Share
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    வணங்குகிறேன் இதுவல்லவோ சமூக தொண்டு

  • Ram - ottawa,கனடா

    ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை இவர்கள் செய்கிறார்கள் நன்றி , அரசாங்கம் இடவொதுக்கீடு என்றபெயரில் இன்னும் திறமையானவர்களை விடுத்தது தாசில்தார், அரசு அலுவலர் , தனியாறில் பெரிய வேலைவாய்ப்பில் இருக்கும் பலரின் குழந்தைகளுக்கு பலனை கொடுக்கிறது , வெட்கக்கேடு

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement