dinamalar telegram
Advertisement

வானமே எல்லை

Share


அருணா
சென்னை அரசுப்பள்ளியில் இந்த வருடம் பிளஸ் டூ முடித்த மாணவி
அப்பா கட்டிட தொழிலாளி,அம்மா வீட்டு வேலை இவர்களின் ஒரே சந்தோஷம் மகள் அருணாதான்.
இதே பள்ளியில் பிளஸ் டூ முடித்த மாணவர் சண்முகம்.இவரும் எளிமயைான குடும்பத்தில் இருந்து வந்தவர்தான்.
இரு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கின்றனர்
காரணம் ரஷ்யாவில் உள்ள விண்வெளிப் பயிற்சி மையத்தில் குறுகிய கால பயிற்சி பெற முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள வானியில் கல்வி கற்றுத்தரும் தனியார் நிறுவனம் ஒன்று அகில இந்திய அளவில் நான்கு கட்ட தேர்வுகள் நடத்தி அதில் தேர்வாகும் பத்து மாணவர்களை ரஷ்யாவிற்கு தங்களது நிறுவனத்தின் சார்பில் அனுப்பிவைக்க உள்ளது.இதில் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது அரசு பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்,தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையும் இதனை அங்கீகரித்து மாணவர்ளை ஊக்குவித்தது.
இதனடிப்படையில் நடந்து முடிந்த தேர்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து பத்து மாணவர்களை தேர்வு செய்துள்ளது.இதில் முதல் இரண்டாவது இடத்தை அருணாவும்,சண்முகமும் பெற்றுள்ளனர்.
இதனைக் கொண்டாடும் விதத்தில் பள்ளி வளாகத்தில் குழுமிய ஆசிரியர்கள் குறிப்பாக இந்த இரு மாணவர்களின் தேர்விற்கு காரணமான இயற்பியல் ஆசிரியை வெங்கடேஷ்வரி ஆகியோர் மாணவர்களை பாராட்டி மகிழ்ந்தனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள் என்றால் சாதாரணமானவர்கள் இல்லை அவர்களாலும் சாதிக்கமுடியும் என்பதற்கான அடையாளம்தான் இது,கடந்த வருடம் இதே பள்ளியில் இருந்து மூன்று மாணவர்கள மருத்துவக்கல்லுாரிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் பெருமை பொங்க தலைமை ஆசிரியர் பிரபுதாஸ்.
மாணவ மணிகள் அடுத்தடுத்த தேர்வில் வெற்றி பெறட்டும் என்று நமது வாழ்த்தையும் தெரிவித்து விடைபெற்றோம்
-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா

    எப்பவும் அரசு துறையை மோசமாக சித்தரிக்கும் தொலைக்காட்சி மாபியாக்களும் , ரஞ்சித் போன்ற சினிமாக்காரர்களுக்கு சமர்ப்பணம்

  • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

    அரசு பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை குறைத்து மதிப்பிட்டு சரியான தரமான கல்வி வழங்க மறுக்கும் அரசியல் வாதிகள் மற்றும் சினிமாகாரர்களுக்கு இச்செய்தியை சமர்பணம் செய்யுங்கள். கோடீஷ்வர குழைந்தைகள் தரமான கல்வியோடு பல மொழிகளை கற்று வரும் சூழலில் , ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியும் , வாழ்வாதாரம் உயர வேற்று மொழி பயிலவும் தடைபோட்டு "சரிநிகர் சமானம் " பேசும் நவீன " சமுக நீதி" பேசும் அரசியல் வாதிகள் சினிமாகாரர்களும் இதனை கவனிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் போட்ட பிச்சையில் இன்று அரசில் இருக்கும் மாண்புமிகு மந்திரிகளும் எம்எல்ஏகளும் கவனிக்கவும்.( கிறிஸ்தவ பாதிரியார் "பிச்சை " என்பதை ஆதாரத்துடன் நிருபித்துள்ளார். வேறு யாரும் சொல்லவில்லை. யாரும் இதுவரை மறுப்பும் தெரிவிக்கவில்லை. )

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement