dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி: கொரோனா நேரத்தில், சென்னை போன்ற பெருநகரங்களில், குத்துமதிப்பாக மின் வாரிய 'பில்', வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டது. 'மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்' என்ற பயத்தில், மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இதை வைத்து, 'அதிக மின்சாரத்தை பயன்படுத்தியதால், 'டிபாசிட்' கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' என, 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது.


'டவுட்' தனபாலு: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு, துவக்க நாட்களில் அடிக்கடி மின் தடை, பெரிய பிரச்னையாக இருந்தது. அதன் பின் இப்போது, மின் கட்டண டிபாசிட் நோட்டீஸ், மீண்டும் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்க்கும் போது, அ.தி.மு.க., - அ.ம.மு.க.,விலிருந்து, தி.மு.க.,வுக்கு சென்று, மின் துறை அமைச்சராக இருப்பவர் மீது, தி.மு.க.,வினருக்கு பல விதமான, 'டவுட்'டுகள் வருகின்றன.


பத்திரிகை செய்தி:
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள ஜெ., தோழி சசிகலா, நேற்று அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர் மதுசூதனனை சந்திக்க, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, அ.தி.மு.க., கொடி கட்டிய காரில் சென்றார். அப்போது மதுசூதனன் அறையில் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., இருந்தார். அதை அறிந்து அவசரமாக அவர் வெளியேறினார்.


'டவுட்' தனபாலு: சிறை தண்டனை முடிந்து சென்னை வந்த பிறகு, 'அரசியலில் ஈடுபட மாட்டேன்' என்ற அந்த பெண், தேர்தல் முடிந்தவுடன், 'எப்படியும் வந்து விடுவேன்...' என, 'ஆடியோ, வீடியோ'க்களை வெளியிட்டு வருகிறார். அதை பார்க்கும் போது, அ.தி.மு.க.,வை கைப்பற்றுவது தான் அவரின் செயல்திட்டம் என்பதில், மக்களுக்கு, 'டவுட்'டே இல்லை!


ஓ.பி.எஸ்., அ.தி.மு.க.,ஒருங்கிணைப்பாளர்:
அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்தை பார்க்கும்போது, ஆட்சியில் இருக்கும்போது மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் போன்ற பணிகளை மேற்கொள்வது. ஆட்சி போனதும், அந்த திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என்ற, தி.மு.க.,வின் இரட்டை நிலைப்பாடு தெளிவாகிறது.


'டவுட்' தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியின் போது, அந்த ஆட்சியை, தி.மு.க.,வினர் குறை கூறுவதும், இப்போதைய தி.மு.க., ஆட்சியை, அ.தி.மு.க.,வினர் குற்றம்சாட்டுவதும், பரஸ்பரம் அரசியல் ரீதியிலானவை என்பதில், அப்பாவி மக்களுக்கு, 'டவுட்'டே இல்லை. எப்படியோ, இவ்விரு கட்சிகளிடம் சிக்கி, தமிழக மக்கள் படும்பாடு இருக்கிறதே, அப்பப்பா...

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எப்படியும் மக்களுக்காக ஆக்க ப்ப்பூர்வமாக செயலாற்ற எந்தக் கட்சியும் முன் வராது லாவணி பாடத்துடன் மக்கள் ஓட்டுப்போட்டு உட்கா1ர்த்தி வைக்கிறார்கள் என்பதை தனபாலு இன்றுதான் டவுட்டில்லாமல் கண்டுகொண்டார் போலும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement