dinamalar telegram
Advertisement

21 நாள் ஆச்சர்யம்..

Share


கொரோனா காரணமாக அறிமுகமான ஊரடங்கால் அதிகம் முடங்கிப்போனது மக்களின் மனதுதான்.
வருமானம் இருக்கிறதோ இல்லையோ? வேலை இருக்கிறதோ இல்லையோ?எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் நம் மக்கள்.
பொறுப்பற்ற ஊடகங்களில் பொங்கி வழிந்த கொரோனா செய்தியால் மக்கள் மனம் உலைக்களமானது
அந்த மக்களில் ஒருவர்தான் தரணீதரன்
ஜெயிப்பதற்காகவே பிறந்தவர். கல்வியும்,திறமையும்,நேர்மையும்,புதிய சிந்தனையும் மட்டுமே நம்மை முன்னேற்றும் என்ற நம்பிக்கை கொண்டவர்.
இதன் காரணமாக என்ஜீனிரிங் படிப்பு அமெரிக்காவில் கொண்டு போய் நிறுத்தியது. சம்பளமாக டாலர்கள் கொட்டினாலும் மனது நீ இதற்கு சரிப்பட்டு வரமாட்டாய் என்று சொல்ல வேலையை துாக்கிப்போட்டுவிட்டு கல்லுாரி ஆசிரியரானார்.
ஒருவர் தனக்கு அதிகாரமும் திறமையும் இருந்தும் அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல் இருந்தால் அது கற்ற கல்விக்கு அழகல்ல என்பதால் தனது திறனை டிஜிட்டல் உலகிற்கு மடைமாற்றினார்.
இவரது ‛சோஷியல் ஈகிள் மார்கெட்டிங்' நிறுவனமானது கிடு கிடுவென வளர்ந்தது.சென்னையில் ஒரு லட்சத்தும் அறுபதாயிரம் ரூபாய் வாடகை கட்டிடத்தில், பல ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து முதன்மை நிர்வாகியாக வலம் வந்தார்.
சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பு, தொழிலதிபர்களின் நம்பிக்கை, உயர்பதவியில் இருப்பவர்களின் நட்பு என்று வாழ்க்கை வளமாகவும் நலமாகவும் போய்க்கொண்டு இருந்தது.
ஒரு நாள் வீட்டில் இருங்கள் என்று ஆரம்பித்து அப்புறம் ஒரு வாரம் ஒரு மாதம் என்று ஊரடங்கு தொடர்ந்த நிலையில் பலரைப் போல இவரும் நிறைய இழப்புகளை சந்தித்தார்.
எல்லாவற்றையும் ஈசியாக எடுத்துக் கொண்டு எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் தரும் மனைவி பிரியா,சுறுசுறுப்பின் மொத்த உருவமான மகன் ஜெகத் ஸ்ரீ கிருஷ்ணா,பெற்றோர்,உறவுகள்,நண்பர்கள் மட்டுமே துணயைிருந்தனர்.எதை இழந்தாலும் தன்னை இழக்ககூடாது என்பதை உணர்ந்தார் இந்த உணர்வை சமூகத்திற்கு தரவிரும்பினார்.இந்த நேரத்தில் மக்களுக்கு தேவை எல்லாம் நேர்மறை சிந்தனை மட்டுமே என்பதை உணர்ந்து அதிகாலை 5 மணி வெப்பினார் ஒன்றை துவங்கினார்.
அதிகாலை 5 மணிக்கு துவங்கி 6 மணிவரை ஒரு நண்பரைப் போல மிக எளிமையாக வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான விஷயங்களை தனது அனுபவங்கள் மூலமாக பேசுகிறார்.தான் படித்த உலகின் மிகச் சிறந்த வாழ்வியல் ஆங்கில புத்தகங்களின் சாறு பிழிந்து தருகிறார்.
எந்த ஒரு விஷயமும் 21 நாட்கள் கடைப்பிடித்துவிட்டால் போதும் அது வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் என்பதால் தனது வெப்பினாரையும் 21 நாட்களுக்கு வருமாறு வகுத்துக் கொண்டார்.
ஆலோசனையாகவோ,சுயவிளம்பரமாகவோ,போதனையாகவோ இல்லாமல் புதுமாதிரியாக இருந்த இவரது வெப்பினாருக்கு நல்ல வரவேற்பு .இந்தியாவில் 5 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் என்றால் சில நாடுகளில் இருப்பவர்கள் நேர இடைவெளி காரணமாக அதிகாலை 3 மணிக்கே எழுந்திருக்கவேண்டும் இருந்தும் விழித்தெழுந்து நிறைய பேர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
பலர் திரும்ப தங்களது தொழிலை உத்வேகத்துடன் துவங்கியுள்ளனர்.வாழ்க்கையில் விரக்தியின் எல்லைக்கு போனவர்கள் மீண்டு வந்துள்ளனர்,புதிய வேலைக்கு முயற்சித்து வெற்றி பெற்றுள்ளனர்.எந்தவித விளம்பரமும் இல்லாமல் பயன்பெற்றவர்களின் பிரச்சாரம் காரணமாக அடுத்தடுத்த வெப்பினாருக்கு வேண்டுகோள் விடவே 32 பயிற்சி வகுப்புகளைத்தாண்டி விரைவில் 33 வது பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.
தன்னால் இதுவும் முடியும் இதற்கு மேலும் முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் தொழில் முனைவோருக்கான இடைவிடாத 30 மணி நேர செமினார் நடத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இவரது பயிற்சியால் எதையும் இழக்கப் போவது எதுவும் இல்லை ஆகவே முயற்சித்து பார்க்கலாம் குறைந்த பட்சம் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கம் ஒன்றாவது உருவாகும். ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பலரை உயர்கல்வி படிக்க வைப்பதற்காக அரசால் அப்துல்கலாம் விருது கொடுத்து பாராட்டப் பெற்ற ஆனந்தம் அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமார்தான் எனக்கு இவரை சிபாரிசு செய்தார் நானும் நேரில் போய்ப் பார்த்து உரையாடிய போது அவர் மீதான நம்பிக்கை அதிகப்பட்டது.
தரணீதரனை தொடர்பு கொள்வதற்கான வாட்ஸ் அப் எண்:9361468236
-எல்.முருகராஜ்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement