dinamalar telegram
Advertisement

காய், கனிகளின் ஆயுளை அதிகரிக்கும் பூச்சு!

Share

சத்துக்களைத் தாங்கி வரும் காய்கறிகள் மற்றும் பழங்கள், அலமாரியில் அதிக நாட்கள் இருக்க என்ன செய்யலாம்? இது விஞ்ஞானிகளுக்கு ஒரு முக்கியமான சவால். இந்த சவாலை, 'புரோசேன்' என்ற ஒரு உயிரிப் பொருள் சமாளிக்க உதவும்.

பிரான்சை சேர்ந்த 'புரோடெமி' நிறுவனம், புரோசேன் என்ற 100 சதவீத இயற்கை பொருளைக் கொண்ட ஒரு பூச்சுப் பொருளை உருவாக்கியுள்ளது. இந்தப் பொருளை காய்கறிகள் மற்றும் பழங்கள் மீது போட்டு புரட்டினால், மெல்லிய புரோசேன் படலம் அவற்றின்மீது உருவாகிறது.

இந்தப் பூச்சு, காய்கனிகளின் இயற்கையான ஈரப்பதம், ருசி மற்றும் மணம் ஆகியவற்றை வெகுநாட்கள் பொத்திக் காக்கிறது. இதனால், விளைபொருட்கள், அங்காடி அலமாரியில் சில வாரங்கள் கூடுதலாக கெடாமல் பத்திரமாக இருக்கும்.

புரேசேன் படலத்தை நுகர்வோர் விரும்பினால் கழுவி அகற்றலாம். அல்லது அப்படியே சாப்பிடலாம். இதனால் எந்தவித ஒவ்வாமையும், நச்சுத் தன்மையும் உடலுக்கு ஏற்படாது என புரோடெமி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.புரோசேனில் அடங்கியுள்ள உயிரி பாலிமர் உட்பட எல்லா பொருட்களும் எளிதில் மட்கிவிடும் தன்மை கொண்டவை. அதுமட்டுமல்ல, புரேசேனை தயாரிக்கும் ஆலையும் சுற்றுச்சூழலுக்கு துளியும் கேடு விளைவிக்காதது என்பதுதான் ஆச்சரியம். ஆர்கானிக் காய்கறிகளுக்காக தேடி அலைபவர்களுக்கு புரேசேன் நிச்சயம் பிடிக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

    இயற்கை ஓர் அற்புதமான ரகசியம். இயற்கை ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் அவ்வுயிர் இனத்தால் விளையும் பொருட்கள் / உயிர்கள் அனைத்திற்கும் ஓர் கால நிர்ணயம் செய்து உள்ளது. அப்பொழுது தான் சுழன்று கொண்டிருக்கும் கால சக்ரத்தால் அனைத்து உயிர் இனங்களும் வேண்டியதை பெற்று தம் வாழ் நாட்களில் நலமுடன் திகழும். இந்த இயற்கை தத்துவத்திற்கு எதிராக எது செய்தாலும் அது அழிவின் ஆரம்பமாகத்தான் இருக்கும். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. வெல்வது போல் இருக்கும் ஆனால் அது மாயத்தோற்றம் தான்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement