dinamalar telegram
Advertisement

தண்ணீர் விரயத்தை தவிர்க்கும் உணரி!

Share

பிரிட்டனின் பல பகுதிகளில் இப்போதே நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிலையில், நீர் விரயத்தை குறைக்க குடிநீர் வடிகால் வல்லுனர்கள் ஆராய துவங்கிவிட்டனர்.பிரிட்டனிலுள்ள ஒரு நிறுவனம், ஏகார்டியோ என்ற உணரிகளை உருவாக்கியுள்ளது. இந்த உணரிகள் புத்திசாலித்தனமானவை. குளியல் ஷவரிலும், கழிப்பறையின் பிளஷ் செய்யும் தொட்டியிலும் இதை பொருத்தலாம்.

ஷவரில் உள்ள உணரிகள், நீர் வெளியேறும் அளவு, அதற்கு ஆகும் மின் சக்தி ஆகியவற்றை அளந்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அனுப்புகின்றன. கழிப்பறையிலுள்ள தொட்டியிலில் நீர் கசிவு போன்ற கோளாறுகள் ஏற்பட்டால் அதை, ஏகார்டியோ உணரி உடனே தெரிவிக்கிறது.

வீட்டு உரிமையாளரின் மொபைலுக்கு உணரிகள் அனுப்பும் தகவல் வந்துவிடும். இதனால், தேவைக்கு அதிகமான நேரம் தினமும் ஷவரில் குளியல் போடுவதை, வீட்டிலுள்ளவர்கள் தவிர்க்க முடியும். கழிப்பறை நீர் விரயமும் தவிர்க்கப்படும்.

இப்படி ஒரு நாடு முழுதும் குளியல் மற்றும் கழிப்பறைகளில் நீர் விரயத்தை தவிர்க்க முடிந்தால், தண்ணீர் பஞ்சத்திலிருந்து இங்கிலாந்து தப்பிவிடும் என ஏகார்டியோவின் கண்டுபிடிப்பாளர்கள் நம்புகின்றனர். நல்ல விஷயம் தான்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா

    அருமையான முயர்சி

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement