dinamalar telegram
Advertisement

எரிமலை தரும் உலோகப் புதையல்கள்!

Share

சுரங்கத் தொழிலுக்கு உலகெங்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. எனவே, வருங்காலத்தில் தங்கம், தாமிரம், லித்தியம் போன்ற உலோக தேவைகளுக்கு என்ன செய்வது? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய உத்தியை முன்வைத்துள்ளனர். உலகெங்கும் அவ்வப்போது குமுறும் எரிமலைகளின் அடிப்பகுதியில் ஏராளமான எரிமலைக் குழம்புகள் ஆறி பாறைகளாக மாறிக்கிடக்கின்றன.

அவற்றை, புதுவிதமான சுரங்கத் தொழில்நுட்பங்களை உருவாக்கி எடுக்க முடியும் என்று ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தற்போது பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் உலோகங்களும், பண்டைக்கால எரிமலைக் குழம்புகள்தான். ஆனால், கடந்த சில நுாற்றாண்டுகளாக எரிமலைப் பகுதிகளில் உள்ள பாறைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை.

எனவே, எரிமலைகளின் மேலிருந்து 2 கி.மீ., கீழே உள்ள குழம்புகள் மற்றும் பாறைகளை குடைந்து எடுத்தால் பல விலை உயர்ந்த உலோகங்களை பிரித்தெடுக்க முடியும். அதே நேரம், பூமியின் வெப்பத்தை வைத்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் என ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • Dhana - Bangalore,இந்தியா

    மறுசுழற்சி மட்டுமே இதற்கான தீர்வு. அநேகபட்ட விலையுயர்ந்த உலோகங்கள் நமது கைகளில் மின்னணு பொருட்களாக உள்ளன. இவற்றை அவற்றின் பயன்பாட்டிற்கு பின் மறுசுழற்சி செய்வதன் மூலம் அணைத்து உலோகங்களின் தேவையையும் சமாளிக்க முடியும். Vans Chemistry போன்ற மிக சிறந்த மறுசுழற்சி மையங்கள் நம் நாட்டில் உள்ளன. இவற்றை முறையாக பயன்படுவோமாக

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement