dinamalar telegram
Advertisement

குற்றவாளியை காட்டிக்கொடுக்கும் மண்!

Share

ஒரு குற்றம் நடந்த பிறகு, குற்றவாளியை தேடுவதில் ஒரு பெரிய சிக்கல். அந்த ஆசாமி எந்தப் பகுதியைச் சேர்ந்தவன் என்பது தெரியாத நிலையில், போலீசார் பரந்துபட்ட புவிப்பரப்பில் தேடியாக வேண்டும். இந்த விஷயத்தில் உதவ வருகிறது ஆஸ்திரேலியாவின் ஜியோசயின்ஸ் ஆஸ்திரேலியா.

குற்றம் நடந்த இடத்தில், குற்றவாளி நடமாடியிருப்பான். அப்போது அவனது செருப்பு அல்லது ஷூவிலிருந்து அவனது சொந்தப் பகுதியைச் சேர்ந்த மண் துகள்கள், அவனது காலடித் தடயத்தில் சிறிதேனும் கிடைக்கும். அதை வைத்து, அந்த மண் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்று கணிக்கலாம்.

ஜியோசயன்ஸ் ஆஸ்திரேலியாவின் வல்லுனர்கள், அந் நாட்டின் பல பகுதிகளிலிருந்து மண்ணை எடுத்து வந்து. அதில் ஒரு பகுதி மண்ணை அடையாளம் காண முயற்சித்தனர். நவீன ஒளிர்ம எக்ஸ் கதிர்கள், காந்தவியல் மற்றும் சில வேதியியல் அலசல்களுக்குப் பின், ஆஸ்திரேலியாவின் 60 சதவீதப் பகுதியிலிருந்து குறிப்பிட்ட மண் மாதிரியை எடுத்திருக்க முடியாது என்று வல்லுனர்கள் கணித்தனர்.

இது கேட்க அசத்தலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், துப்பறியும் குழுவினருக்கு இத் தகவல் நிம்மதியைத் தரக்கூடியது தான். ஏனெனில், குற்றவாளியை 60 சதவீத இடங்களில் தேட வேண்டியதில்லை என உறுதியாகத் தெரிந்துதான்.காலடி மண் தடயத்தை மேலும் துல்லிமாக ஆராய ஜியோசயன்ஸ் ஆஸ்திரேலியாவின் வல்லுனர்கள் முயன்று வருகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement