dinamalar telegram
Advertisement

இப்போது மணீஷ் மிஸ்ரா

Share


மத்திய பிரதேசம் போபால் காவல் நிலையத்தில் உதவி கமிஷனர் ரேங்கில் ரத்தன் சிங்,விஜய் ஆகிய இரு போலீஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இளகிய மனம் கொண்ட இவர்கள் தங்களது சம்பளத்தில் பெரும் பகுதியை கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தெருக்களில் ஒண்டியிருக்கும் ஏழை எளியவர்களுக்கு உணவு உடை வழஙகுவதற்கு செலவழித்துக் கொண்டிருந்தனர்.
அன்று அவர்கள் சென்ற பகுதியில் பாலத்தின் கீழ் யாரையும் தொந்திரவு தராத பைத்தியக்காரன் ஒருவன் தங்கியிருந்தான்.காடு போல வளர்ந்த தாடி, மீசை, கந்தலான கிழிந்த உடை,இளைத்து துரும்பாகிப் போன அழக்கேறிய உடல் இதுதான் அவனது தோற்றம்.
எப்போதும் தனக்கு தானே பேசுவதும் சிரிப்பதுமாக இருப்பான், யாராவது தேடி வந்து உணவு கொடுத்துவிட்டு செல்வர், மற்றபடி அவனை யாரும் தொந்திரவு செய்வதில்லை அவனும் யாரையும் தொந்திரவு செய்ததில்லை.
இந்த பைத்தியக்காரனைப் பற்றி கேள்விப்பட்டதும் அவனுக்கு கொஞ்சம் நல்ல உணவும் கொஞ்சம் உடையும் போர்வை போன்ற பொருளையும் கொடுப்பதற்காக ரத்தன் சிங்கும் விஜயும் அங்கு சென்றனர்.
அங்கேதான் எதிர்பாரத அந்த சம்பவம் நடந்தது.
உணவு உடைகளை கொடுத்து விட்டு திரும்பும் போது,‛ என்னப்பா ரத்தன்,விஜய் எப்படியிருக்கீங்க?' என்று அந்த பைத்தியக்காரன் கேட்கவும் இருவரும் திகைத்துப் போயினர்.
தங்களுடன் நெடுநாள் பழகியவர் போல பேசுகிறாரே யார் இவர்? என உற்றுப்பார்த்துவிட்டு ஆச்சர்யத்தன் உச்சத்திற்கே சென்றனர்.காரணம் ‛என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்றும், பலருக்கு ரோல் மாடலாகவும் இருந்தவரும், காணாமல் போனதாக கைவிடப்பட்டவருமான மணீஷ் மிஸ்ரா என்ற போலீஸ் அதிகாரிதான் அவர்.
ஷிவ்புரியை சொந்த ஊராகக் கொண்ட மணீஷ் மிஸ்ரா சிறந்த தடகள வீரர் காக்கி சட்டையை அணிவது என்பது அவர் கனவு படித்த முடித்த கையோடு நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு வந்தார்.
தனது செயல்களால் காவல் துறைக்கு பெருமை தேடித்தந்தார் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் இதற்காக பல முறை விருது வாங்கியுள்ளார் தனது இந்த திறமையை கிரிமினல்களுக்கு எதிராக காட்டியதால் என்கவுண்டன் ஸ்பெஷலிஸ்ட் என்றும் பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடித்து போதைப் பொருளை அழித்தற்காக அரசால் 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கிடைத்த போது அதை தனக்கு என எடுத்துக் கொள்ளாமல் தனது டீமில் இருந்த அனைவருக்கும் பிரி்த்துக் கொடுத்து மகிழ்ந்தவர்.அது அவரது சுபாவமும் கூட.
இவரைப் போன்ற வேலையை அதிகமாகக் காதலிப்பவர்களுக்கே உண்டான சிக்கல் இவரையும் சூழ்ந்தது குடும்பத்தை கண்டுகொள்வதே இல்லை மனைவி என்ன செய்கிறார், அவருக்கு என்ன செய்கிறது பிள்ளை என்ன படிக்கிறான் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் வேலையே கதியென இருந்ததால் குடும்பம் இவரைவிட்டு பிரிந்தது.
இந்த திடீர்ப்பிரிவை தாங்க முடியாத மணீஸ் மிஸ்ராவிற்கு பணிச்சுமையும் சேர்ந்து கொள்ள ‛ பைபோலா டிஸ்ஆர்டர்'என்ற மனநோய்க்கு ஆளானார்.ஓரு கேள்விக்கு பத்து விதமாக பதிலைத் தந்தவர் பிறகு பத்து கேள்விகள் கேட்டாலும் ஒரே விதமாக பதிலைத் தந்தார் நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டதன் காரணமாக பார்த்துவந்த போலீஸ் வேலையை தொடரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
காவல் துறை இவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்தார் திடீரென ஒரு நாள் மருத்துவ மனையில் இருந்து காணாமல் போய்விட்டார்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
வருடங்கள் உருண்டோடியது
கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழிந்த நிலையில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை நினைவில் கொண்டு அழைத்ததன் காரணமாக மணீஸ் மிஸ்ரா மீட்டெடுக்கப்பட்டு ஒரு காப்பகத்தல் ஒப்படைக்கப்பட்டார்
இது நடந்து ஆறு மாதங்களாகிவிட்டது இப்போது அவரது நிலை எப்படியிக்கிறது
தாடி மீசை தலைமுடி எல்லாம் எடுத்து நல்ல உடையுடன் கொஞ்சம் தெம்பாக காணப்படுகிறார் ,காப்பகத்தில் யாராவது காது கொடுப்பவர் கிடைத்தால் நிறைய பேசுகிறார் பேச்சை விட சிரிப்பு அதிகம்சில நேரம் தெளிவாகவும் பல நேரம் தெளிவின்றியும் பேசும் மணீஷ் மிஸ்ராவிற்கு பழைய சம்பவங்கள் எதுவும் நினைவில் இல்லை நண்பர்கள் ரத்தன்,விஜய் போல இன்னும் சிலரது பெயரை தெரிந்து வைத்திருக்கிறார் அவ்வளவுதான்.
அவர் நன்றாக இருந்திருந்தால் இப்போது உதவி கமிஷனர் நிலையில் இருந்திருப்பார் அல்லது அதைவிடவும் உயர்ந்த நிலைக்கு சென்றிருப்பார் அவரால் காவல்துறைக்கு திரும்ப முடியாது உடலும் மனமும் அதற்கு ஒத்துழைக்காது ஆனால் துறைக்கு பெருமை சேர்த்த அவருக்கு நன்றியுடன் இருப்போம் அவருக்கான பணபலன்களை பெற்றுத்தரமுடியும் ஆனால் நமக்குதான் அது பணம் அவரைப்பொறுத்தவரை அது பேப்பர்தான் என்கிறார் உள்ளூர் போலீஸ் அதிகாரி
அவரது குடும்பத்தாரிடம் பேசிவருகிறோம் இப்போதுள்ள நவீன சிகிச்சையில் அவரை முழுமையாக குணப்படுத்த முடியுமா? எனவும் முயற்சித்து வருகிறோம்,எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில் சொல்லவேண்டும் என்று முடித்துக் கொண்டார்.
மணீஷ் மிஸ்ராவை திரும்பிப் பார்த்தோம் கையை துப்பாக்கியாக்கி காற்றில் சுட்டுக் கொண்டிருந்தார் வாய் ‛டுப் டுப்' என்று சத்தமிட்டது. அந்த சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த காப்பக குழந்தை ஒன்று இவரைப் போலவே சத்தமிட்டு சிரித்தது.
மணிஷ் மிஸ்ராவின் இந்த வாழ்க்கை வரமா? சாபமா? தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
-எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • Nesan - JB,மலேஷியா

    வரங்களே சாபங்கள் ஆனால் வாழ்க்கை எதற்கு?

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    வாழ்க்கையின் நீரோட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.

  • Krish - Salem,இந்தியா

    கொடுமையிலும் கொடுமை

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement