dinamalar telegram
Advertisement

தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் திருமேனியின் குடும்பம்

Share


தனது பிள்ளையை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டதன் மூலம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட திருமேனியின் குடும்பம் தற்போது நல்லதொரு தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுாகா திம்மசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழை டெய்லர் திருமேனி.இவருக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தை பாவேந்தன். மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையாக பிறந்ததால் பிறந்தது முதல் எவ்வித செயல்பாடுகள் இல்லாமல்தான் வளர்ந்தான்.மகனின் மருத்துவ செலவு காரணமாக மனம் மற்றும் பணக்கஷ்டத்திற்கு உள்ளான திருமேனி சமாளிக்க முடியாத சூழ்நிலையில் மகனை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பாவேந்தனுக்கு வேண்டிய மருத்துவ உதவிகள் செய்யும்படியும், பாவேந்தனை பராமரிக்கும் செலவாக மாதந்திர உதவித் தொகை வழங்கிட அரசு பரிசீலிக்கவும் கேட்டுக் கொண்டார்.
நீதிபதியின் வேண்டுகோள் அடிப்படையில் சென்னை அனிருதா மெடிக்கல் ஆர்கனைசேஷன் நிறுவனம் பாவேந்தனுக்கு சிறந்த முறையில் சிகிச்சை கொடுத்தனர்,கொரோனா காரணமாக அந்த சிகிச்சையை தொடரமுடியாத சூழ்நிலையில் பாவேந்தனுடன் திருமேனி சொந்த ஊர் திரும்பினார்.
பாவேந்தன் வழக்கை நடத்திவரும் வழக்கறிஞர் கவிதா ரமேஷ்வர்தான் திருமேனியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை பலவழிகளிலும் செய்து கொடுத்து வருகிறார்
பாவேந்தன் வழக்கில் நீதிமன்றம் தரப்போகும் தீர்ப்பைத்தான் திருமேனியின் குடும்பம் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளை வைத்திருக்கும் திருமேனி போன்ற ஆயிரக்கணக்கான பெற்றோர்களுக்கு ஒரு விடியல் கிடைக்கலாம்.
திருமேனியிடம் பேசுவதற்க்கான எண்:98435 01683.
-எல்.முருகராஜ்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (8)

 • P.MANIMARAN - keeranur,இந்தியா

  ஒரு நாள் டாஸ்மார்க் வருமானத்தை கொடுத்து காப்பற்றலாம்.. அரசு பரிசீலனை செய்யுமா.

 • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

  வசதியாக வாழமுடியவில்லை கஷ்டப்படுகிறோம் என மனு வரலாம்

 • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

  கரு உருவான பின் கலைக்க முயல்வதே இவ்வாறான மனவளர்ச்சி குறைபாடு அல்லது பல வகை மாற்று திறனாளி குழந்தைகள் பிறக்கிறது எனலாம் வெளி நாடுகளில் நிலைமையென்ன என்றும் ஆராய வேண்டும் இந்த என்கருத்தை மறுப்பவர்கள் (மருந்து உற்பத்தி கம்பெனிகள்) மருத்துவ ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு விடை கண்டறியலாம் இது அவர்களுக்கு ஆயுட்கால தண்டனையாகி விடுகிறது

 • mani - thirumayam,இந்தியா

  இந்த பாவ செயலை தயஉசெய்து செய்யாதீர்கள் .அந்த சின்ன பையனை ஆசிரமம்தில் சேர்க்கவும் .அவன் வாழ வேண்டியவன் .இதெற்கு எதுக்கு கோர்ட் தீர்ப்பு .

 • ராஜ், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம். - ,

  என்ன தான் மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்றாலும் கருணை கொலை செய்வது பாவம்.பெற்றோர் அந்த குழ்ந்தையை நிலையை கண்டு தினம் தினம் வேதனைபடுவதும் வருத்தம் தான் ஆனால் அதற்காக கருணை கொலை செய்வது மாகபாவம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement