dinamalar telegram
Advertisement

முப்பரிமாண அச்சில் வைட்டமின் மிட்டாய்!

Share

ஒவ்வொரு குழந்தைக்கும் தனி சத்துணவு தேவைப்படும். இதை பெற்றோரால் கூட கவனித்து வழங்க முடிவதில்லை. இதற்கு பரிகாரமாக, பிரிட்டனை சேர்ந்த 'நரிஷ்டு' என்ற வைட்டமின் தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய முறையை கண்டுபிடித்துள்ளது.

இணையம் வழியே ஒரு குழந்தைக்கு பிடித்த, பிடிக்காத சுவைகள், தினசரி நடவடிக்கைகள், அலர்ஜிகள் போன்ற வற்றை அறிந்து, அதற்கு ஏற்றபடி வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை, நரிஷ்டுவின் ஆராய்ச்சியாளர்கள் ஒரே மிட்டாயாக தயாரிக்கின்றனர். அதையும்கூட நவீன முப்பரிமாண அச்சியந்திரங்கள் மூலம் இந்த சத்து மிட்டாய்களை உருவாக்குகின்றனர்.

ஒவ்வொரு தனிக் குழந்தைக்கென்றே சிறப்பாக உருவாக்கப்படும் வைட்டமின் மிட்டாய்களில், அனைத்துமே இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை. இந்த மாத்திரைகளை பெற்றோர், மாதாந்திர சந்தா தொகை செலுத்தி தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.நரிஷ்டுவின் இந்த புதுமை முறையை, பிரிட்டனின் பெற்றோர்கள் வரவேற்க துவங்கியுள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement