dinamalar telegram
Advertisement

நலம் தரும் 'அதிர்வு' வைத்தியம்!

Share

உடல், உள்ளம் இரண்டையும் பராமரிக்க வேண்டும் என்ற உணர்வு, பெருந்தொற்று காலத்தில் மேலோங்கியுள்ளது. இதற்கு ஈடுகொடுக்க தொழில்நுட்பத்தின் துணையோடு 'சவுண்ட் பெட்' போன்ற படுக்கைகள் வந்துள்ளன.ஒரே நேரத்தில் உடல் மற்றும் உள்ளத்தை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்ல, நவீன தொழில்நுட்பத்தை இத்தகைய படுக்கைகள் பயன்படுத்துகின்றன.

'சவுண்ட் பெட்' படுக்கை துாக்கத்திற்கு அல்ல. ஒருவர் அதன் மீது படுத்தவுடன், மிக மெல்லிய அதிர்வுகளை தரும். உடலின் வெவ்வேறு பாகத்திற்கு, வெவ்வேறு அலைவரிசையில் அதிர்வுகளை ஏற்படுத்தும் வசதி இப்படுக்கையில் உள்ளது. இந்த மெல்லிய அதிர்வுகளால், படுத்திருப்பவரின் தசைகளும், நரம்புகளும் நல்ல ஓய்வு நிலைக்கு செல்லும். அது மட்டுமல்ல, காதில் மாட்டியிருக்கும் ஒலிக்கருவி மூலம், படுக்கையின் அதிர்வுகளுக்கு ஏற்ப இனியஓசைகள் வரும். இந்த நிலையில் மன இறுக்கங்கள் தளர்ந்து, படுத்திருப்பவரின் மனம் உள்நோக்கிய தியான நிலைக்கு செல்லும்.

'ஒலி சிகிச்சை' என்ற புதிய துறையின் வல்லுனர்கள் 'ஓபஸ்' படுக்கையை வடிவமைக்க உதவி உள்ளனர். சில நிமிடங்கள் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைப்பது, மனம் விரைவில் ஒருமித்த நிலைக்கு செல்வது போன்றவற்றால் ஓபஸ் போன்ற படுக்கை தொழில்நுட்பங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என ஓபசின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement