dinamalar telegram
Advertisement

உலகின் முதல் 'ஆய்வக இறைச்சி' தொழிற்சாலை!

Share

கோழி, மீன் போன்ற பிராணிகளின் செல்களை, ஒரு கிண்ணியில் வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்து பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, பிரபல உணவகங்களே ஆய்வுக்கூடத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட இறைச்சியை ஏற்க துவங்கியுள்ளன.

இஸ்ரேல் சும்மா இருக்குமா? 'கல்ச்சர்டு மீட்' எனப்படும் ஆய்வக இறைச்சி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் இஸ்ரேல், தற்போது உலகின் முதல் ஆய்வுக்கூட இறைச்சியை, பெருமளவில் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கியுள்ளது.

'பியூச்சர் மீட் டெக்னாலஜீஸ்' உருவாக்கியுள்ள இந்த தொழிற்சாலையில், ராட்சத இயந்திரங்களுக்கு பதில், ஏணி தேவைப்படுமளவுக்கு உயரமான உயிரி கலன்கள் நிறுவப்பட்டுள்ளன.

இக்கலன்களில் பன்றி, மாடு போன்றவற்றின் செல்கள், பல்கி பெருகி, நேரடி யாக இறைச்சியாகவே வளர்கின்றன. பண்ணை முறையில் வளர்ப்பதைவிட 10 மடங்கு கூடுதல் இறைச்சி இதில் கிடைப்பதாக பியூச்சர் மீட் டெக்னாலஜீசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்ணை முறையில் தேவைப்படுவதைவிட, 96 சதவீதம் குறைவான நீரும், 99 சதவீதம் குறைவான நிலமும் தான் ஆய்வக இறைச்சிக்கு தேவை.இதனால் தான், இதை 'செல் வேளாண்மை' என்று சிலர் அழைக்கின்றனர். எல்லாவற்றையும்விட, இஸ்ரேலிய ஆலையில், எந்த விலங்கும் கொல்லப்படாமலேயே, தினமும் 5 ஆயிரம் 'பர்கர்'களுக்கு தேவையான இறைச்சி தயாராகிறது. இனி விரைவில், கோழி முதல் இறால் வரை எல்லா வகை அசைவ உணவுகளும் இதே செல் வேளாண்மை முறையில் கிடைக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா

    ஆமா அந்த பல்கி பெறுக கூடிய ஆரம்ப செல் அந்தந்த விலங்குகளிடம் இருந்துதானே எடுத்திருப்பார்கள்....

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

    அப்போதாவது மாட்டிறைச்சி இந்தியாவில் சட்டபூர்வமாக எல்லோரும் கொண்டு செல்லலாமா ... இல்லை அப்பொழுதும் அடித்து கொள்வீர்களா ...

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement