dinamalar telegram
Advertisement

செல்லம்மாளுடன் காத்திருக்கிறார் பாரதி?

Share

நாளை (ஜீன்-27) நமது மகாகவி பாரதி-செல்லம்மாளின் திருமண நாள்
தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்த அழகிய ஊர் கடையம்.மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் ராம நதி, ஜம்பு நதி என்று இரண்டு நதிகள் வளம் சேர்கின்றன.பெருமாளும்,கல்யாணிஅம்மனும் காத்தருள்கின்றனர்.விவசாயம்தான் பிரதானம்.
பாரதியின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் என்பதும் இங்கே பாரதி (1918-20) இரண்டு ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார் என்பதும்தான் கடையத்திற்கு சிறப்பு.
1897 ல் செல்லம்மாளை திருமணம் முடிக்க கடையம் வந்த பாரதி 21 வருடங்கள் கழித்து கடலுார் சிறையில் இருந்து விடுதலையாகி உடலும் மனமும் நொந்த நிலையில்தான் மீண்டும் மனைவியின் வீடிருக்கும் கடையத்திற்கு வருகிறார்.வந்தவருக்கு பெரிய வரவேற்போ, மரியாதையோ கிடையாது.ஒரு பித்தனைப் போலத்தான் இங்குள்ள குன்றுகளிலும் தட்டப்பாறையிலும் வயல்வெளிகளிலும் கோவில்களிலும் வீட்டு திண்ணைகளிலும் பாடல்கள் பாடியிருக்கிறார்.
பாரதி உலாவிய இந்த இடங்களையெல்லாம் 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே….' என்ற பாடலில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஞான.ராஜசேகரன்.
மனிதர்களை சாதி வாரியாக பிரித்து பேதம் பார்ப்பதை வெறுத்த பாரதியார் ' துணி வெளுக்க மண்ணுண்டு எங்கள் முத்து மாரியம்மா.. மனம் வெளுக்க வழியில்லை..' எங்கள் முத்து மாரியம்மா என்று மனம் வெந்து பாடியது இங்குதான். 'நவராத்திரிக்கு ஏதாவது பாட்டு எழுதித் தாங்கோ மாமா' என்று கேட்ட உடனே எழுதிக் கொடுத்த பாடல்தான் 'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி'. இங்குள்ள பெண்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடல்தான் 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா…'
இப்படி கடையத்தினை அங்குலம் அங்குலமாக அளந்தது அவரது பாதங்கள் மட்டுமல்ல பாடல்களும்தான்.
இருந்தும் அவருக்கோ செல்லம்மாளுக்கோ எந்தவிதமான சிலையோ நினைவிடமோ இங்கு இல்லை.
பாரதிப்பிரியரும் சென்னையில் சேவாலயா என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக கல்வியைத்தந்து வருபவருமான முரளிதரனுக்கு இது உறுத்தியிருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரதி-செல்லம்மாளின் திருமண நாளான ஜூன் 27 ம்தேதி கடையத்தில் பெரிய விழா நடத்தி ஆயிரம் பேர்களுக்கு திருமண விருந்து வழங்கினார் அங்குள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கொடுத்தார் வருடாவரும் இதே போல இங்கு இந்த விழா சிறப்பாக நடத்தப்படும் அடுத்த ஆண்டு விழாவின் போது பாரதி-செல்லம்மாள் சிலையுடன் வருகிறேன் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் நான் கொண்டுவரும் சிலையை வைக்க இடம் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான் என்று வேண்டுகோள் வைத்தார்.
கடையம் அக்ராஹரத்தில் பாரதி-செல்லம்மாளின் தோளில் கைபோட்டு கம்பீரமாக நடந்து போன காட்சியை சித்தரிக்கும் விதத்தில் நான்கு லட்ச ரூபாய்க்கு சிலையும் செய்துவிட்டார்.சிலை தற்போது சென்னை திருநின்றவூரில் காத்திருக்கிறது
அந்த வருடமும் சரி கடந்த வருடமும் சரி இந்த வருடமும் சரி இன்னமும் பாரதி-செல்லம்மாள் சிலை வைக்க சரியான இடம் ஒதுக்கப்படாததால் பாரதி-செல்லம்மாள் தம்பதியினர் சிற்பியின் வீட்டில் சிலையாக காத்திருக்கின்றனர்.
இதோ நாளை 124 வது திருமண நாள் விழா கொண்டாட வழக்கம் போல சேவாலயா முரளிதரன் தயராகிவிட்டார்.திருமண விருந்து பள்ளி சிறார்களுக்கு பரிசு ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுக்க சபாநாயகர் அப்பாவுவை அழைத்திருக்கிறார்.அவரது வருகையினால் சிலை வைக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் விரைவில் பாரதி-செல்லம்மாளை அங்கு உலாவவிடலாம் என்று நம்புகிறார் முரளிதரன்.
-எல்.முருகராஜ்Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (5)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பாரதியாருக்கு நேருவின் ஷெர்வாணியா? தாடியா? யார் இந்த சிலையை வடிவமைத்தது? வேண்டுமென்றே, சர்ச்சைகளைக் கிளப்பி அதில் குளிர் காய முனைகிறார்களோ??

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் - தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு - நிறைய உடையவர்கள் மேலோர்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை என்று பாடிய தேசபக்தனுக்கு சிலைவைக்க போராட வேண்டியுள்ளது நடுரோட்டில் அண்ணா சொரியார் சிலைவைக்க இடம் இருக்கு காங்கிரஸ்கரன் வாய் திறக்கலை இவங்க தேச பக்தியை பாருங்கள் மக்களே

 • சோணகிரி - குன்றியம்,இந்தியா

  பாட்டுக்கொரு புலவன் பாரதியின் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய கடையத்தின் சிறப்புகளை மிக அழகாக விவரித்த கட்டுரை ஆசிரியருக்கு வந்தனங்களும் வாழ்த்துக்களும்... சேவாலயா முரளிதரன் அவர்களுக்கு வந்தனங்கள்... பாரதி செல்லம்மாள் தம்பதியரின் சிலை விரைவில் நிறுவப்பட பிரார்த்தனைகள்...

 • Nagaraj - Doha,கத்தார்

  கண்ணீர் வரவழைக்கும் பதிவு.. கூடிய சீக்கிரம் சிலை நிறுவி முண்டாசு கவிக்கு மரியாதை செய்ய வேண்டும்... சேவாலயா முரளிதரனுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement