dinamalar telegram
Advertisement

நாளை தேசபந்துவின் நினைவு தினம்

Share


நேதாஜியின் குரு சித்ரஞசன் தாஸ் நினைவை போற்றுவோம்.
தீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குருவாக திகழ்ந்தவரும்,தேசப்பற்று காரணமாக 1920 ம் ஆண்டிலேயே மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் தந்த வழக்கறிஞர் தொழிலை துறந்தவரும்,தேசபந்து (தேசத்தின் நண்பன்) என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவருமான சித்ரஞ்சன் தாஸ்க்கு நாளை நினைவு தினம் .நம் இந்திய திருநாட்டிற்காக பாடுபட்ட பல தலைவர்களில் சித்தரஞ்சன் தாஸ்சும் முக்கியமானவர்.1870 ம் ஆண்டில் பிறந்து 1925 ம் ஆண்டு ஜூன் 16 ம்தேதி அன்று தனது 54 வயதில் இறந்தவர்.தான் வாழ்ந்த 54 வயதில் அவர் நாட்டிற்காக ஆற்றிய சாதனைகள் பல

Border Collie
Border Collie
கொல்கட்டாவில் பிறந்து அங்கு பட்டப்படிப்பை முடித்தவர் இங்கிலாந்து சென்று மேற்படிப்பு முடித்து இந்தியா திரும்பி தனது வழக்கறிஞர் தொழிலை நடத்தினார்.தனது சிறப்பான வாதங்களால் குறுகிய காலத்தில் பிரபலமான வழக்கறிஞரானார்.1920 ம் ஆண்டுகளிலேயே மாதம் 50 ஆயிரம் ஊதியம் பெற்றார்.
மேற்கத்திய இலக்கியங்களில் நமது ஆத்மா இல்லை என்று சொல்லி ராமகிருஷ்ணர்,விவேகானந்தர் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றவர்.அது தொடர்பாக பல புத்தகங்களை எழுதியவர்.
அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வாதாடி வெற்றி பெற்றதும் இவர் புகழ் நாடு முழுவதும் பரவியது, அதே நேரம் நாட்டின் விடுதலைக்காக வந்தே மாதரம் என்ற இதழில் நெருப்பு பறக்கும் கட்டுரைகளை எழுதினார்.வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைகை எதிர்த்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் அவருடன் சிறைப்பட்டவர்களில் நேதாஜியும் ஒருவர், சிறைவாசம் சித்ரஞ்சன் தாஸை இன்னும் புடம் போட்டது நேதாஜி போன்றவர்களை சீடராக்கியது.
அதிக ஊதியம் தந்த வழக்கறிஞர் தொழிலை துறந்தார் நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு மேயரானார் நேதாஜி நிர்வாக அதிகாரியானார் சிறப்பான பல திட்டங்களை கொண்டு வந்ததால் மீண்டும் மேயராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அனைவருக்கும் கல்வி வேண்டி பாடுபட்டார் விதவைகள் மறுமணம் போன்ற சீர்திருத்தங்களில் ஈடுபட்டார் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய பிரமுகரானார்,பிரிட்டிஷாருக்கு எதிராக மக்கள் பொங்கும் போதெல்லாம் மகாத்மா காந்தி அந்த போராட்டங்களை ஏதாவது சொல்லி நீர்த்துப் போகச் செய்வதாக குற்றம் சுமத்தி காங்.கட்சியை விட்டு வெளியேறி சுயராஜ்யா கட்சியை உருவாக்கினார்.கட்சிக்காக பார்வர்ட் என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.
தனது சம்பாத்தியம் அனைத்தையும் நாட்டிற்கும் மக்களுக்கும் வழங்கினார் தான் குடியிருந்த வீட்டையும் தனக்கு பின் மக்களுக்கான மருத்துவ மனையாக மாறட்டும் என்றார் இன்றைக்கு அவர் விருப்பப்படி அவரது வீடு ‛சித்தரஞ்சன் சேவாசதன்' என்ற பெயரில் கொல்கத்தாவின் மருத்துவமனையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவரைப் பற்றி நேதாஜி எப்போதும் பெருமைபட பேசுவார்.இத்தகைய பெருமைக்குரிய சித்தரஞ்சன் தாஸை அவரது நினைவு நாளில் போற்றுவோம்
-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    இவரைப்போல் இருந்த தேச பக்தர்களை நமது சரித்திர புத்தகங்களில் போடமாட்டார்கள். E V R மற்றும் கருணாநிதி புகழ் பாடும் பாடங்களைத் தான் போடுவார்கள். காந்தியின் கொள்கைகளை எதிர்த்து பிடிக்காமல் காங்கிரஸை விட்டு வெளியேறியவர். உண்மையான சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றுவோம். போலி காந்திகளை புறக்கணிப்போம்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    WB produced plenty of gems nationalist. Leaders. Today in the hands of. Anti-nationals

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement