dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி:தமிழகத்தில், சிமென்ட் விலை சில நாட்களில், மூட்டை, 370 ரூபாயில் இருந்து, 520 ரூபாயாக அதிகரித்திருக்கிறது; இது நியாயமற்றது. சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச விலையை, தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: இப்படித் தான் கடந்த முறை, மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டது. கடைகள் நீண்ட காலம் திறக்காத நிலையில், திறந்த பின் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன. அப்படி தான் இப்போது, சிமென்ட் விலையும் உள்ளது. இதை பார்க்கும் போது, சிமென்ட் சூத்திரதாரிகள், மத்திய - மாநில அரசுகளின் கண்களை கட்டி விட்டனரோ அல்லது அவர்களை அரசுகள் கண்டுகொள்ளவில்லையோ என்பன போன்ற, 'டவுட்'டுகள் மக்களுக்குவருகின்றன!


தமிழக பா.ஜ., தலைவர் முருகன்:
தி.மு.க., ஆட்சி அமைத்து, 30 நாட்கள் கடந்து விட்டன. தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது ஆட்சி அமைத்த பிறகு, அது குறித்து வாய் திறக்கவே மறுக்கிறது. வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.


'டவுட்' தனபாலு: நடிகர் கமல் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து, பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தி.மு.க.,வும் அறிவித்து விட்டது. இப்போது ஆட்சிக்கு வந்து விட்ட நிலையில், அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படுவது, 'டவுட்' தான். ஏனெனில் அந்த அளவுக்கு, அரசிடம் பணமில்லை; நிதி நிலைமை மோசம்!


தமிழக பா.ஜ., ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத்:
சென்னை, வடபழநி கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் நிலம் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும், கோவில் சொத்துக்களை கண்டறிந்து மீட்க, ஒரு சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும் போதும், இதுபோல பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; வந்த வேகத்தில், துரிதமாக நடந்த வேலைகள், பின் மந்தமாகி போய் விட்டன. அந்த மந்தநிலைக்கு என்ன காரணமோ என்பது தான், இப்போது வரை பலருக்கும், 'டவுட்'டாக உள்ளது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (7)

 • skandh - Chennai,இந்தியா

  காரோண பாதிப்பு , இறப்பு போல வடபழனி கோவில் சொத்து மீட்பும் ஒரு கப்ஸாவாமே . சொல்லப்பட்ட சொத்துக்கள் எல்லாமே வடபழனி கோவில் பேரில் தான் இருக்காமே . ஆனால் அங்கு இருந்த CAR பார்க்கிங்கை எடுத்துவிட்டார்களாம் . இதுதான் மீட்பாமே . இதை தினமலர் ஆராய்ந்து போடவேண்டும் . இல்லாவிட்டால் சேகர்பாபு இன்னும் அதிகமாக பொய்யரையே சொல்லிக்கொண்டிருப்பார் . DINAMALAR செய்யுமா ?

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  தேர்தலில் வாக்குறுதி கொடுத்தால் அத நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெண்களுக்கு ரூபாய் .ஆயிரம் கொடுப்பதாக சொன்னதை நிதி நிலைமை அறிந்து செயல் படுத்துங்கள் என திரு. முருகன் ,பாஜக தலைவர் சொல்லியிருப்பாரேயானால் பாராட்டுக்குரியவர்.

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  "தி.மு.க., ஆட்சி அமைத்து, 30 நாட்கள் கடந்து விட்டன. தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது.".... கவலை படாதீங்க அடுத்த அரசு அவங்க அரசா இருந்த அரியர்சா தருவோமுன்னு நினைக்கிறார்களோ என்னவோ.....

 • rajan - erode,இந்தியா

  சென்னை, வடபழநி கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் நிலம் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. - இதை செய்தது ஹிந்து விரோத கட்சி என்று சங்கி மங்கி பிஜேபி ஆர்எஸ்எஸ்காரர்களால் முத்திரை குத்தப்பட்ட திமுக

  • Suppan - Mumbai,இந்தியா

   இது ஒரு ஜெகஜ்ஜால பிராடு. கோவில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.இவைகளை அப்புறப்படுத்தினார்கள் என்று அறிகிறோம்.நல்லது. என்னவோ யாரோ அந்த நிலத்தை ஆட்டையைப் போட்டு தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டுவிட்டதாகவும் அதை இப்பொழுது மாற்றிவிட்டதாகவும் புருடா விட்டிருக்கிறார்கள்.

 • rajan - erode,இந்தியா

  இப்போது ஆட்சி அமைத்த பிறகு, அது குறித்து வாய் திறக்கவே மறுக்கிறது. வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அடேய் முருகா மோடி ஒவ்வொரு இந்தியருடைய கணக்கிலும் (பதவிக்கு வந்து நூறு நாட்களில்) பதினைந்து லட்சம் ரூபாய் தருவேன் என்று முழங்கி ஏழு ஆண்டுகள் முடிந்துவிட்டன - நீ நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் மோடியிடம் இதை வெளிப்படையாக சொல் இல்லாவிட்டால் தமிழ்நாட்டைவிட்டு பாகிஸ்தானுக்கு செல்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  காரணம் என்ன பெரிய கம்ப சூத்திரமா? பெரிய இடங்களை ‘பார்த்து’ முடித்து விட்டால் குழு ஒதுங்கிக்கொண்டு விடும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement