dinamalar telegram
Advertisement

மூளையின் வரைபடம் உருவாகிறது!

Share

மனித மூளையை ஒரு தனி பிரபஞ்சம் என்பர் விஞ்ஞானிகள். அந்த பிரபஞ்சத்தின் ஒரு துளியை, மூளையின் மில்லியனில் ஒரு பகுதியை முப்பரிமாண வரைபடமாக விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை மற்றும் கூகுள் நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டாக இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.

கேட்பதற்கு மிகச் சிறிய அளவு போல தோன்றினாலும், இது உலகளாவிய சாதனை தான்.இதற்கே, மூளையின் நியூரான்கள், இணைப்புகள் என்று எடுக்கப்பட்ட, 225 மில்லியன் புகைப்படங்களை அவர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. அத்தனை தகவல்களையும் இணைத்து, மூளையின் ஒரு சிறிய பகுதியை முப்பரிமாணத்தில் காட்டுவதற்கு தேவைப்பட்ட தகவல்களின் அளவு எவ்வளவு தெரியுமா?

1.4 பெட்டாபைட் அளவுக்கு தகவல்களை கணினியின் நினைவு கிடங்கில் தேக்க வேண்டியிருந்தது என, கூகுள் மற்றும் ஹார்வர்டின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • RajanRajan - kerala,இந்தியா

    எப்படியோ சாமிகளா தலைக்குள் மூளை எப்படி எல்லாம் செயல்படும் செயல்பட வைக்க முடியும் என்பதை ஒரு விரிவான அலசல் பண்ணி காட்டுங்கள். இங்கத்த இம்சை அரசன் இம்சை தாங்க முடியல்லே . நன்றி வணக்கம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement